இங்கிலாந்தில் நடைபெறும் உலகக்கோப்பை தொடரில் இந்தியா-இங்கிலாந்து அணிகள் வரும் ஜூன் 30ஆம் தேதி மோதவுள்ளன. இரு அணி சீருடைகளும் ஒரே நிறமென்பதாலும் இங்கிலாந்து தொடரை நடத்தும் அணியென்தாலும் இந்திய அணி தனது சீருடையை காவி நிறத்திற்கு மாற்றியது.
காவிமயமான இந்திய அணி - பிசிசிஐ முடிவென்று ஐசிசி திட்டவட்டம்
உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி காவி நிற உடையில் களமிறங்கவுள்ளது பிசிசிஐயின் முடிவு என, சர்வதேச கிரிகெட் கவுன்சில் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து சர்வதேச கிரிகெட் கவுன்சில் தெரிவித்துள்ளதாவது, இந்திய அணியின் சீருடையின் நிறம் என்பது முழுவதும் பிசிசிஐயின் முடிவாகும். சீருடையானது இங்கிலாந்து அணியிலிருந்து வேறுபட்டிருக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம் என்றும் இந்திய அணியின் பழைய டி20 சீருடையிலிந்து புதிய சீருடை வடிவமைக்கபட்டதாகவும் ஐசிசி தெரிவித்துள்ளது.
மேலும் சமூக வலைதளங்களில் வேகவாக பரவிவரும் இந்தச் சீருடையைப் பார்க்க பெட்ரோல் பங் உழியர்களின் சீருடையைப் போல உள்ளது என்று நெட்டிசன்கள் கலாய்த்து வருகின்றனர்.