தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி முதலிடத்தில் நீடிக்குமா ஆஸ்திரேலியா?

லண்டன்: மாலை 6-மணிக்கு மான்செஸ்டரில் தோடங்கும் 45-வது லீக் போட்டியில் நடப்பு சாம்பின் ஆஸ்திரேலியா அணி தென் ஆப்ரிக்க அணியை எதிர்கொள்கிறது.

உலககோப்பை கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை களம் காண்கிறது தென்ஆப்ரிகா.

By

Published : Jul 6, 2019, 2:26 PM IST

2019ஆம் ஆண்டிற்கான உலக்கோப்பை கிரிக்கெட் போட்டி இங்கிலாந்து நாட்டில் கோலாகலமாக நடைபெற்று இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

உலககோப்பை கடைசி லீக் போட்டியில் ஆஸ்திரேலியாவை களம் காண்கிறது தென்ஆப்ரிகா.

ஆஸ்திரேலியா அணியைப் பொறுத்தவரையில், 8 போட்டிகளில் 7 வெற்றி 1 தோல்வி என 14 புள்ளிகள் பெற்று புள்ளிப்பட்டியளில் முதலிடத்தில் உள்ளது.

இதுவரை வெற்றிபெற்ற ஏழு போட்டிகளிலும் பேட்டிங்கில் சிறப்பாக ஆடினாலும், ஆஸ்திரேலிய அணியின் பந்துவீச்சில் பெரிய முன்னேற்றம் ஏற்படவில்லை. ஸ்டார்க், பெஹண்டராஃப், பட் கம்மின்ஸ் என மிரட்டலான பந்துவீச்சாளர்கள் இருந்தும் சொல்லிக்கொள்ளும்படியான செயல்பாடுகள் எதுவும் இல்லை. இதனால் இன்றைய போட்டியில் பந்துவீச்சாளர்கள் சிறப்பாக செயல்படுவார்களா என ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

அதேபோல் தென்னாப்பிரிக்கா அனியைப் பொறுத்தவரையில், உலகக்கோப்பைத் தொடரிலிருந்து வெளியேறினாலும் கடைசி ஆட்டத்தில் வெற்றிபெற வேண்டும் என்ற உறுதியோடு களமிறங்குகிறது. ஆம்லா, டி காக், டூ ப்ளஸிஸ் ஆகியோர் மட்டுமே சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவதால் இன்றைய போட்டியிலாவது மற்ற வீரர்கள் சிறப்பாக ஆடுவார்களா என ரசிகர்கள் சீண்டி வருகின்றனர்.

ரபாடா, பெலுக்வாயோ, இங்கிடி, மாரீஸ், தாஹிர் என சிறந்த பந்துவீச்சாளர்கள் உள்ளதால் ஆஸ்திரேலிய அணிக்கு சவால் அளிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இன்று நடைபெறும் மற்றொரு ஆட்டத்தில் இந்திய அணி இலங்கையை வீழ்த்தினால், இந்தியா முதலிடத்திற்கு செல்லும். எனவே ஆஸ்திரேலிய அணி முதலிடத்தில் நீடிக்க தென்னாப்பிரிக்காவை வீழ்த்த வேண்டும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் இன்றைய போட்டி ரசிகர்களிடயே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details