தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அகில இந்திய கபடி போட்டிகள் குமரியில் தொடக்கம்!

கன்னியாகுமரி: குமரி மாவட்டம் அழகப்பபுரத்தில் அகில இந்திய அளவிலான ஆண்கள், பெண்களுக்கான கபடி போட்டிகள் வரும் 30ஆம் தேதிவரை நடைபெறுகிறது.

national_kabbad
national_kabbad

By

Published : Dec 28, 2019, 4:41 PM IST

கன்னியாகுமரி மாவட்டம் அழகப்பபுரம் செண்ட் ஆன்டனிஸ் ஸ்போர்ட்ஸ் கிளப் சார்பில் 51ஆவது ஆண்டு அகில இந்திய அளவிலான ஆண்கள் மற்றும் பெண்களுக்கான கபடி போட்டிகள் இன்று செயின்ட் ஆன்டனிஸ் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் தொடங்கியது.

இந்த கபடி போட்டிகளை பங்கு தந்தைகள் நெல்சன் பால்ராஜ் மற்றும் சர்ச்சில் ஆகியோர் தொடங்கிவைத்தனர். போட்டிகள் வருகிற 30ஆம் தேதி வரை நடைபெறுகின்றன. இதில் ஹரியானா, டெல்லி, மும்பை, கோவா, பாண்டிச்சேரி, ஹைதராபாத் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த கபடி அணிகள் கலந்துகொள்கின்றன.

அகில இந்திய கபடி போட்டிகள் குமரியில் தொடக்கம்

ஆண்கள், பெண்கள் என இரண்டு பிரிவுகளாக நடைபெறும் போட்டிகளில் வெற்றி பெறும் அணிக்கு முதல் பரிசாக ஒன்றரை லட்சம் ரொக்கப்பணமும், சுழற்கோப்பையும், இரண்டாம் பரிசாக 1 லட்சம் ரொக்க பணமும் சுழற்கோப்பையும் வழங்கப்பட உள்ளது. இதனை ஏராளமான பார்வையாளர்கள் உற்சாகத்துடன் கண்டுகளித்தனர்.

இதையும் படிங்க:முதல் உலகக்கோப்பை நாயகனுக்கு கிடைத்துள்ள புதிய கௌரவம்!

ABOUT THE AUTHOR

...view details