தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

வில்லியம்சன் அதிரடியால் வலிமையான நிலையில் நியூசிலாந்து!

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி முதல் இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.

By

Published : Jan 4, 2021, 8:51 PM IST

Williamsons' 112 helps NZ cut Pakistan's lead in 2nd Test
Williamsons' 112 helps NZ cut Pakistan's lead in 2nd Test

நியூசிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டெஸ்ட் போட்டி இன்று கிறிஸ்ட்சர்ச்சில் தொடங்கியது. இப்போட்டியில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் முதலில் பந்துவீச தீர்மானித்தார்.

பின்னர் முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணி எதிரணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து ஆட்டமிழந்து வெளியேறினர். இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 297 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து முதல் இன்னிங்ஸை நிறைவு செய்தது.

பின்னர் இன்று தொடங்கிய இரண்டாம் நாள் ஆட்டத்தில், முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய நியூசிலாந்து அணியில் டாம் லாதம் 33 ரன்களிலும், பிளென்டல் 16 ரன்களிலும் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினர். அவர்களைத் தொடர்ந்து வந்த ராஸ் டெய்லரும் 12 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த கேப்டன் வில்லியம்சன் - ஹென்றி நிக்கோலஸ் இணை நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இதில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய கேன் வில்லியம்சன் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது 24ஆவது சதத்தைப் பதிவு செய்து அசத்தினார்.

மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த ஹென்றி நிக்கோலஸும் அரைசதம் கடந்து அணிக்கு உதவினார். இதனால் இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் நியூசிலாந்து அணி மூன்று விக்கெட்டுகளை இழந்து 286 ரன்களை எடுத்துள்ளது.

நியூசிலாந்து அணி தரப்பில் கேன் வில்லியம்சன் 112 ரன்களுடனும், ஹென்றி 89 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் களத்தில் உள்ளனர். இதன்மூலம் 11 ரன்கள் பின்தங்கிய நிலையில் நியூசிலாந்து அணி நாளை மூன்றாம் நாள் ஆட்டத்தை தொடரவுள்ளது.

இதையும் படிங்க:இங்கிலாந்து கிரிக்கெட் வீரர் மொயின் அலிக்கு கரோனா

ABOUT THE AUTHOR

...view details