இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான முதலாவது டெஸ்ட் போட்டி பகலிரவு ஆட்டமாக அடிலெய்டில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கியது. இப்போட்டியில் முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி தனது முதல் இன்னிங்ஸில் 244 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.
அதைத்தொடர்ந்து, முதல் இன்னிங்ஸைத் தொடங்கிய ஆஸ்திரேலிய அணியும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் 191 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியது.
மோசமான பேட்டிங்கை வெளிப்படுத்திய இந்தியா:
இதைத்தொடர்ந்து இரண்டாவது இன்னிங்ஸைத் தொடங்கிய இந்திய அணியில் பிரித்வி ஷா, மயாங்க் அகர்வால், புஜாரா, கேப்டன் கோலி, ரஹானே விஹாரி, சஹா, அஸ்வின் ஆகியோர் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். இதனால் இந்திய அணி 36 ரன்களுக்கு டிக்ளர் செய்ததாக அறிவிக்கப்பட்டது. இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ரன்களை எடுத்த அணி என்ற மோசமான சாதனையையும் இந்திய அணி படைத்தது. ஆஸ்திரேலிய அணி தரப்பில் ஹசில்வுட் 5 விக்கெட்களையும், பாட் கம்மின்ஸ் 4 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.