அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் உயிரிழப்புக்கு நீதிகேட்டு நடந்த போராட்டம் உலகம் முழுவதும் #BlackLivesMatter என்ற வாசகத்துடன் அடையாளப்படுத்தப்பட்டது. இதனால் கறுப்பின மக்களுக்கு ஆதரவாகப் பலரும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனொரு பகுதியாக நிறவெறி பற்றி மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த கால்பந்து கிளப்புகள் முடிவுசெய்தன. இதனைத்தொடர்ந்து இங்கிலாந்து பிரீமியர் லீக் தொடரில் கறுப்பின மக்களுக்கு ஆதரவாக #BlackLivesMatter என்ற வாசகத்துடன் அனைத்து அணிகளும் போட்டிகளுக்கு முன்பாக வலியுறுத்தின.
இந்நிலையில் கிரிக்கெட் போட்டிகளின்போது #BlackLivesMatter போராட்டம் ஆதரவளிக்க ஐசிசி அனுமதியளித்துள்ளது. இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின்போது வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது ஜெர்சியில் #BlackLivesMatter லோகோவுடன் களமிறங்கவுள்ளனர்.
இது குறித்து வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் பேசுகையில், ''மக்களிடையே ஒற்றுமை, விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டிய கடமை எங்களுக்கு உள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியின் வரலாற்றைப் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு இப்போது இளைஞர்களாகிய எங்களிடம் இருக்கிறது.