இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் அணி மூன்று டி20, மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது டி20 போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இந்த அணிகளுக்கு இடையிலான இராண்டாவது டி20 போட்டி இன்று திருவனந்தபுரத்தில் தொடங்குகிறது. இந்த போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
கடந்த போட்டியில் வெற்றி பெற்ற இந்திய அணி இந்த போட்டியில் மாற்றமின்றி அதே அணியுடன் களமிறங்குகிறது. வெஸ்ட் இண்டீஸ் அணியைப் பொறுத்த வரையில் தடையிலிருந்து மீண்டுள்ள நிக்கோலஸ் பூரான் அணிக்கு திரும்பியுள்ளார். இதனால் விக்கெட் கீப்பர் தினேஷ் ராம்டினுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ளது.