இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான கடைசி டெஸ்ட் போட்டி நாளை (மார்ச் 4) அகமதாபாத்திலுள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெறவுள்ளது. இதற்காக இரு அணி வீரர்களும் கடுமையான வலை பயிற்சியில் ஈடுபட்டு வந்தனர்.
இந்த மைதானத்தில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் இரண்டு நாள்களில் முடிந்ததையடுத்து, மைதானத்தின் தன்மை குறித்தும், பிட்ச் குறித்தும் பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
இது தொடர்பாக செய்தியாளர்களிடம் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேசியபோது, “கிரிக்கெட் பந்து, பிட்ச் ஏன் இப்படி அடிக்கடி விவாதப் பொருளாகிறது என எனக்கு தெரியவில்லை. பேட்ஸ்மேன்கள் போதிய திறமை இல்லாமல் ஆட்டமிழக்கிறார்கள். இரு அணிகளுமே மோசமாக பேட்டிங் செய்தோம். பிட்சில் என்ன நடக்கிறது என்பதைப் புரிந்துக்கொள்ளும் அளவுக்கு போதிய அனுபவம் பெற்றவனாக இருக்கிறேன் என்று நம்புகிறேன்.
ஆஸ்திரேலியா அல்லது இங்கிலாந்தில் நாங்கள் தொடருக்குச் செல்லும் போது நாங்கள் பிட்ச் பற்றி எந்த கேள்விகளையும் எழுப்புவதில்லையே. மேலும், வெளிநாட்டு தொடர் போட்டிகள் இரண்டு நாள்களில் முடிந்துவிட்டால், இந்திய அணி மோசமான பேட்டிங்கை விளையாடியது தான் காரணம் என கூறும் நீங்கள், எங்கள் மண்ணில் விளையாடும்போது மட்டும் ஏன் பிட்ச் சரியில்லை என காரணம் கூறுகிறீர்கள்.
இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி செய்தியாளர்களை சந்தித்தபோது நான் ஒரு கேள்வி கேட்கிறேன், நாம் விளையாடுவது வெற்றி பெறுவதற்காகவா அல்லது ஆட்டத்தை 5 நாட்களுக்குக் கொண்டு செல்வதற்காகவா? இது என்ன பொழுதுபோக்கா? வெற்றிபெற ஆடுகிறோம். அனைவரும் ரன் எடுப்பதற்காக ஆடவில்லை. இந்தியா வெற்றி பெறுவதை ரசிகர்கள் விரும்புகிறார்கள். ஆனால் எத்தனை நாள்களில் என்பது கேள்வி அல்ல” என பதிலளித்துள்ளார்.
இதையும் படிங்க: 4ஆவது டெஸ்ட்: இங்கிலாந்தை அசால்ட் செய்யுமா இந்தியா?