தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

'டெய்லர் மதன் லாலின் வாழ்க்கை நமக்கான உத்வேகம்' - விவிஎஸ் லக்‌ஷ்மண்

கைகளின்றி கால்களால் தையல் கற்றுக்கொண்டு கடை நடத்திவரும் ஹரியானாவின் மதன் லால் வாழ்க்கை, நமக்கான உத்வேகம் என முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் தெரிவித்துள்ளார்.

Breaking News

By

Published : Aug 1, 2020, 11:59 PM IST

கால்களால் அளவெடுத்து விரல்களால் தையல் இயந்திரத்தைச் சுழற்றி துணிகளைத் தைத்து தன் வாழ்க்கையை நடத்திவருபவர் ஹரியானாவைச் சேர்ந்த மதன் லால். பள்ளிக்குச் செல்லாத இவர் வாழ்வாதாரத்திற்காக டெய்லரிங் தொழிலைக் கற்றுக்கொண்டுள்ளார்.

கால்கள் மூலம் டெய்லரிங் செய்யும் இவரது புகைப்படங்களை முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் விவிஎஸ் லக்‌ஷ்மண் பதிவிட்டுள்ளார். அதில், ''ஹரியானாவைச் சேர்ந்த மதன் லாலுக்கு கைகள் இல்லை. வாழ்க்கையில் பல போராட்டங்களைச் சந்தித்தவர். ஆனாலும் இவர் துவண்டு விடவில்லை. கால்களால் டெய்லரிங் கற்றுக்கொண்டு கடை நடத்திவருகிறார்.

உலகில் பல மனிதர்கள் தங்களின் தலைவிதிகளைக் காரணம் காட்டி, வாழ்வைக் குறைகூறி வருகிறார்கள். இவரின் வாழ்க்கை நமக்கு ஒரு உத்வேகம். நாம் அனைவருக்கும் மதன் லால் முன்மாதிரியானவர்'' என பதிவிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விரைவில் பயிற்சியை தொடங்கும் சிஎஸ்கே!

ABOUT THE AUTHOR

...view details