தமிழ்நாடு

tamil nadu

வயசான என்ன... ஆட்டம் வெறித்தனமா இருக்கும்..! - தோனியை புகழ்ந்த மஞ்ரேக்கர்!

By

Published : Nov 17, 2019, 5:39 AM IST

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி வயதான வீரர்களை வைத்து கூட அணியை வெற்றிக்கு அழைத்து செல்லும் விதம் ஆச்சரியாமாக உள்ளதாக சஞ்சய் மஞ்ரேக்கர் புகழ்ந்துள்ளார்.

Dhoni has managed results with ageing players

கடந்த வெள்ளிக்கிழமை ஐபிஎல் அணிகள் தங்களது அணிகளிலிருந்து சில வீரர்களை ஏலத்திற்கு முன்பே விடுவித்தன. அந்த வகையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியானது மோஹித் சர்மா, சாம் பில்லிங்ஸ், டேவிட் வில்லி, துருவ் சோரே, சைத்தன்யா ஆகியோரை அணியிலிருந்து விடுவித்தது.

மேலும் சென்னை அணியின் மூத்த வீரர்களான ஷேன் வாட்சன், பிராவோ ஆகியோரை அணி நிர்வாகம் மீண்டும் தக்கவைத்துள்ளது. கடந்த ஐபிஎல் சீசனிலேயே சென்னை அணியில் பல வீரர்களின் வயது 30 தாண்டி இருந்ததினால், ரசிகர்கள் சீனியர் அணி என அழைத்தனர்.

இந்நிலையில் தற்போதும் அதுபோன்று அதிக வயதுடைய வீரர்களையே சென்னை அணி தக்கவைத்துள்ளது. இது குறித்து சர்ச்சைக்கு பெயர் போன் சஞ்சய் மஞ்ரேக்கர் தனியர் நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்தார்.

அந்த பேட்டியில், அவர் முன்னாள் இந்திய அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி கடந்த சில ஆண்டுகளில் பழைய வீரர்களின் திறமைகளை அழகாகப் பயன்படுத்தியிருப்பதால் இது வழக்கமான ஒன்று என்று கூறினார்.

மேலும், வாட்சன், பிராவோ ஆகியோரின் வயது நம் அனைவருக்கும் தெரியும். இருப்பினும் சென்னை அணி இளம் வீரர்களையே விடுவித்துள்ளது ஆச்சரியமாக தான் உள்ளது. மீண்டும் தோனி சீனியர் வீரர்களைக் கொண்டு தனது வெற்றிப்பயணத்தை தொடரவுள்ளது வியப்பளிக்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: ஐந்து வீரர்களுக்கு டாடா காட்டிய சிஸ்கே - அணி விபரம் உள்ளே..!

ABOUT THE AUTHOR

...view details