சர்வதேச விளையாட்டு நாளிதழான விஸ்டன், ஆல்-டைம் இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார், என்ற கேள்வியோடு ஃபேஸ்புக்கில் வாக்கெடுப்பு நடத்தியது. மொத்தம் 16 இந்திய வீரர்கள் கொண்ட இந்தப் பட்டியலில் இந்தியாவின் முன்னாள் ஜாம்பவான்கள் சச்சின் டெண்டுல்கர், ராகுல் டிராவிட், சுனில் கவாஸ்கர் மற்றும் விராட் கோலி ஆகியோர் முதல் நான்கு இடங்களைப் பிடித்தனர்.
இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன் யார்?
விஸ்டன் இந்தியா அமைப்பு நடத்திய 'ஆல்-டைம் இந்தியாவின் தலைசிறந்த டெஸ்ட் பேட்ஸ்மேன்' என்ற கணக்கெடுப்பில் கிரிக்கெட் ஜாம்பவான்களான சச்சின் டெண்டுல்கரைப் பின்னுக்குத் தள்ளி ராகுல் டிராவிட் முதலிடம் பிடித்து அசத்தியுள்ளார்.
இதையடுத்து வெற்றியாளர் யார் என்பதைத் தீர்மானிக்கும் விதமாக நடத்தப்பட்ட வாக்கெடுப்பில், 11 ஆயிரத்து 400 ஓட்டுகள் பதிவாகின. இந்த வாக்கெடுப்பின் முடிவில் 'இந்திய அணியின் பெருஞ்சுவர்' ராகுல் டிராவிட் 52 விழுக்காடு வாக்குகளுடன் முதலிடத்தைப் பிடித்தார். அவருக்கு அடுத்தப்படியாக கிரிக்கெட் கடவுள் சச்சின் டெண்டுல்கர் இரண்டாம் இடத்தைப் பிடித்தார்.
இப்போட்டியில் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் சுனில் கவாஸ்கர் மூன்றாம் இடத்தையும், விராட் கோலி நான்காம் இடத்தையும் பிடித்துள்ளனர்.