தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#TeamMaskForce-ன் சேவை நாட்டுக்கு தேவை - பிரதமர் மோடி!

பொதுமக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து கரோனா வைரஸிலிருந்து தங்களை பாதுக்காத்துக்கொள்ளுமாறு விழிப்புணர்வு ஏற்படுத்த பிசிசிஐ வெளியிட்ட #TeamMaskForce காணொலியை பிரதமர் நரேந்திர மோடி பாராட்டியுள்ளார்.

pm-modi-hails-bccis-team-mask-force-initiative
pm-modi-hails-bccis-team-mask-force-initiative

By

Published : Apr 19, 2020, 9:59 AM IST

கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக இந்தியாவில் இதுவரை 16ஆராயிரத்திற்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டும், 500க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தும் உள்ளனர். இப்பெருந்தொற்றிலிருந்து மக்களை பாதுக்காக்கும் நடவடிக்கையாக நாடு முழுவதும் மே 3ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டுள்ளது. மேலும், பொதுமக்கள் யாரும் வீட்டிலிருந்து வெளியேற வேண்டாம் என்றும், அத்தியவசிய பொருள்களுக்காக செல்லும் பொதுமக்கள் கட்டாயம் முகக் கவசம் அணிய வேண்டும் என்றும் அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில், அரசின் இம்முயற்சிக்கு உதவும் வகையில் சச்சின், சேவாக், கங்குலி, விராட் கோலி, மிதாலி ராஜ், ஸ்மிருதி மந்தானா போன்ற நட்சத்திர கிரிக்கெட் வீரர்களை வைத்து #TeamMaskForce என்ற காணொலி மூலம் பிசிசிஐ விழிப்புணர்வு ஏற்படுத்தியுள்ளது.

இதையடுத்து, இந்தக் காணொலியை கண்ட பிரதமர் நரேந்திர மோடி, இன்றைய தினத்தின் முக்கிய பணியாக #TeamMaskForce-ன் ஒரு பகுதியாக பொதுமக்கள் அனைவரும் இருங்கள். இந்த அத்தியாவசிய முன்னெச்சரிக்கையினால் நாம் அனைவரும் பாதுகாப்பாக இருப்போம். முகக் கவசம் அணிவது குறித்தான விழிப்புணர்வை பரப்புவது மிக முக்கியமாகும் என்று நன்றி தெரிவித்துள்ளார்.

பிசிசிஐ-யின் #TeamMaskForce விழிப்புணர்வு காணொலி தற்போது கிரிக்கெட் ரசிகர்கள், சினிமா நட்சத்திரங்கள் என பலராலும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதையும் படிங்க:அரசிற்கு ஆதரவாக களமிறங்கிய பிசிசிஐ! #TeamMaskForce

ABOUT THE AUTHOR

...view details