தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

ஜூலையில் இங்கிலாந்து - பாகிஸ்தான் தொடர் நடப்பது உறுதி...!

கராச்சி: ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொண்டு மூன்று டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கும் என பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் உறுதி செய்துள்ளது.

pakistan-to-tour-england-in-july-in-bio-secure-environment
pakistan-to-tour-england-in-july-in-bio-secure-environment

By

Published : May 18, 2020, 3:11 PM IST

கரோனா வைரஸ் பரவலால் உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் ஒத்தி வைக்கப்பட்டு வந்தன. இந்நிலையில், ஜெர்மனியின் பண்டல்ஸ்லீகா கால்பந்து தொடர் ரசிகர்களின்றி மீண்டும் தொடங்கப்பட்டுள்ளது. இதனால் கிரிக்கெட் போட்டிகள் எப்போது நடக்கும் என ரசிகர்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

தற்போது ஜூலை மாதத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்து அணிக்கு எதிராக மூன்று டெஸ்ட், மூன்று டி20 போட்டிகளில் பங்கேற்கும் என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியத் தலைமை நிர்வாகி வாசிம் கான் பேசுகையில், ''ஜூலை மாதத்தில் இங்கிலாந்திற்கு பயணம் செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. இந்த சுற்றுப்பயணம் பற்றி இங்கிலாந்து கிரிக்கெட் வாரியத்துடன் விரிவான ஆலோசனைகள் மேற்கொண்டோம். அதன்பின்னரே சுற்றுப்பயணத்திற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்தத் தொடருக்காக பாகிஸ்தானிலிருந்து 25 வீரர்கள் நான்கு தனி விமானங்களில் இங்கிலாந்திற்கு பயணம் மேற்கொள்ளவுள்ளனர். இங்கிலாந்து சென்றவுடன் அனைத்து வீரர்களும் தேவைப்பட்டால் தனிமைப்படுத்தப்படுவார்கள். அனைத்து போட்டிகளும் ரசிகர்களின்றியே நடக்கும்.

இந்தத் தொடரின் விவரங்கள் பற்றி பாபர் அஸாம், அஸார் அலி ஆகியோருக்கு தெரிவிக்கப்படும். பாகிஸ்தானைச் சேர்ந்த எந்த வீரரும் இங்கிலாந்து சுற்றுப்பயணத்திற்கு செல்ல கட்டாயப்படுத்தப்பட மாட்டார்கள். எந்த வீரராவது சுற்றுப்பயணம் மேற்கொள்ள விரும்பவில்லை என்றால், அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படாது. ஆனால் எங்களுக்கு வந்த தகவல்களின் அடிப்படையில் அனைவரும் சுற்றுப்பயணம் மேற்கொள்ள ஆர்வமாகவே உள்ளனர்.

வீரர்களுக்கான தங்குமிட வசதி மைதானத்திலேயே இருக்க வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டுள்ளது. அதனால் மான்செஸ்டர் மற்றும் சவுதம்டன் மைதானங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளன. மூன்றாவது மைதானம் எதுவென்று இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் முடிவு செய்து அறிவிக்கும்.

இந்த சுற்றுப்பயணத்தில் மருத்துவர்கள், பாகிஸ்தான் அணியுடன் தொடர்ந்து பயணிக்கவுள்ளனர். தேவைப்பட்டால் ஒவ்வொரு போட்டியின்போதும் வீரர்களுக்கு பரிசோதனை செய்யப்படும்'' என்றார்.

இந்த வாரத்தில் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிக்கு திரும்ப அறிவுறுத்தப்பட்டுள்ளனர். பணப் பிரச்னையில் சிக்கியுள்ள இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம், பாகிஸ்தான் உடனான தொடரை நடத்துவதில் மும்முரமாக உள்ளது.

இதையும் படிங்க:விராட் கோலியோடு பாபர் அஸாமை ஒப்பிட சரியான தருணம் அல்ல...!

ABOUT THE AUTHOR

...view details