ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி தற்போது டெஸ்ட் போட்டிகளில் விளையாடி வருகின்றது. இவ்விரு அணிகளுக்கும் இடையிலான முதல் டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவில் பாகிஸ்தான் அணி, தனது இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 66 ரன்களை எடுத்திருந்தது.
இந்நிலையில் இன்று தொடங்கிய நான்காம் நாள் ஆட்டத்தில், தனது இன்னிங்ஸைத் தொடங்கிய பாகிஸ்தான் அணிக்கு மாசூத், பாபர் ஆசம் சிறப்பான தொடக்கத்தைக் கொடுத்தனர். இதில் மசூத் 41 ரன்கள் எடுத்திருந்த நிலையில் கம்மிங்ஸ் பந்து வீச்சில், விக்கெட்டை இழந்து பெவிலியன் திரும்பினார். அவரைத் தொடர்ந்து களமிறங்கிய அஹ்மத் வந்த வேகத்திலேயே விக்கெட்டை இழந்து வெளியேற அந்த அணி 94 ரன்களுக்குள் ஐந்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
பின் தொடர்ந்து சிறப்பாக விளையாடிய பாபர் ஆசம் சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 12ஆவது சதத்தை அடித்து அசத்தினார். அதன் பின் முகமது ரிஸ்வான், பாபருடன் ஜோடி சேர்ந்து தனது நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். இதன் மூலம் நான்காம் நாள் ஆட்டத்தின் உணவு இடைவேளை வரை பாகிஸ்தான் அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 144 ரன்களை எடுத்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான் அணி ஆஸ்திரேலிய அணியை விட 196 ரன்கள் பின் தங்கிய நிலையில் உள்ளது.
பாகிஸ்தான் அணியில் பாபர் ஆசம் 67 ரன்களுடனும், முகமது ரிஸ்வான் 17 ரன்களுடனும் களத்திலுள்ளனர். ஆஸ்திரேலிய அணி தரப்பில் மிட்சல் ஸ்டார்க், கம்மின்ஸ் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர். இதனால் பாகிஸ்தான் அணி இன்னிங்ஸ் தோல்வியைத் தவிர்க்க போராடி வருகிறது.
இதையும் படிங்க: டோக்கியோ 2020: அர்ஜென்டினா, ஆஸ்திரேலியா குரூப்பில் இடம்பெற்ற இந்தியா