இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி ஆன்டிகுவாவில் நடைபெற்றுவருகிறது. இதில், இந்திய அணி முதல் இன்னிங்ஸில் 297 ரன்களை எடுத்தது. இந்திய அணியில் அதிகபட்சமாக, ரஹானே 81, ஜடேஜா 58 ரன்கள் அடித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கீமார் ரோச் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதைத்தொடர்ந்து, தனது முதல் இன்னிங்ஸை ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணி இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியது. அந்த அணி இரண்டாம் ஆட்டநாள் முடிவில், எட்டு விக்கெட்டுகளை இழந்து 189 ரன்களை எடுத்திருந்தது.
ஷமி பந்துவீச்சில் அவுட் ஆன ஜேசன் ஹோல்டர் இதைத்தொடர்ந்து, இப்போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. இதில் முன்னாள் நிதியமைச்சர் அருண் ஜேட்லியின் மறைவுக்கு துக்கம் அனுசரிக்கும் விதமாக, இந்திய அணி வீரர்கள் தங்களது ஜெர்சியில் கருப்பு நிற பட்டையை அணிந்து களமிறங்கினர்.
இதையடுத்து, இப்போட்டியில் ஓரளவுத் தாக்குப்பிடித்து ஆடிய வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஜேசன் ஹோல்டர் 39 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். அவரைத் தொடர்ந்து மிகுவேல் கமின்ஸ் ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழந்தார். இதனால், வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 222 ரன்களுக்கு ஆல் ஆவுட் ஆனது.
விக்கெட் கைப்பற்றிய மகிழ்ச்சியில் இந்திய வீரர்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் அதிகபட்சமாக, ராஸ்டான் சேஸ் 48, ஜேசன் ஹோல்டர் 39 ரன்கள் எடுத்தனர். இந்திய அணி சார்பில் இஷாந்த் ஷர்மா ஐந்து, முகமது ஷமி, ஜடேஜா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர். இதனால், இந்திய அணி 75 ரன்கள் முன்னிலையுடன் தனது இரண்டாவது இன்னிங்ஸை விளையாடிவருகிறது.