தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

#INDvWI: இந்தியா பேட்டிங்!

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்துள்ளது.

Breaking News

By

Published : Aug 11, 2019, 8:27 PM IST

வெஸ்ட் இண்டீஸில் சுற்றுப்பயணம் செய்துவரும் இந்திய அணி மூன்று டி20, மூன்று ஒருநாள், இரண்டு டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடிவருகிறது. இதில், இந்திய அணி டி20 தொடரை 3-0 என்ற கணக்கில் வென்றது. இதைத்தொடர்ந்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி மழையால் கைவிடப்பட்ட நிலையில், இன்று இரண்டாவது போட்டி நடைபெற்றுவருகிறது.

டாஸ்

டிரினாட் மைதானத்தில் நடைபெற்றுவரும் இப்போட்டியில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் கோலி முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார். இந்திய அணி கடந்த போட்டியில் விளையாடிய அதே 11 வீரர்களுடனே இன்றைய போட்டியில் களமறிங்குகிறது. மறுமுனையில், வெஸ்ட் இண்டீஸ் அணியில் ஃபெபியன் ஆலெனுக்கு பதிலாக ஒஷானே தாமஸ் இடம்பெற்றுள்ளார்.

இந்தியாவுக்கு எதிராக 1999இல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியின்மூலம் அறிமுகமானவர், வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிடி வீரர் கிறிஸ் கெயில். தற்போது 20 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் இந்தியாவுக்கு எதிராக நடைபெற்று வரும் ஒருநாள் தொடர்மூலம் கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறவுள்ளார். தனது அதிரடி பேட்டிங் மூலம் பல சாதனைகளை சிக்சர்களாக பறக்க விட்ட கெயில், இன்று தனது 300ஆவது ஒருநாள் போட்டியில் களமிறங்கவுள்ளார்.

கெயில்

இதன்மூலம், வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக அதிக போட்டிகளில் விளையாடிய முன்னாள் கேப்டன் பிரையன் லாராவின் சாதனையை முறியடித்துள்ளார். இதனால், இன்றைய போட்டியில் தனது அதிரடியான பேட்டிங்கை வெளிப்படுத்தி அவர், தனது அணியை வெற்றிபெறச் செய்வாரா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

இந்திய அணி:கோலி(கேப்டன்), ரோகித் ஷர்மா, ஷிகர் தவான், ஸ்ரேயாஸ் ஐயர், ரிஷப் பந்த், ஜடேஜா, கேதர் ஜாதவ், புவனேஷ்வர் குமார், முகமது ஷமி, குல்தீப் யாதவ், கலீல் அஹமது.

வெஸ்ட் இண்டீஸ் அணி:ஜேசன் ஹோல்டர் (கேப்டன்), கிறிஸ் கெயில், எவின் லீவிஸ், ஷாய் ஹோப், நிகோலஸ் பூரான், ராஸ்டான் சேஸ், கார்லோஸ் பிராத்வெயிட், ஒஷானே தாமஸ், ஷெல்டான் காட்ரல், கீமார் ரோச்

ABOUT THE AUTHOR

...view details