வங்கதேசம், ஆப்கானிஸ்தான், ஜிம்பாப்வே ஆகிய அணிகளுக்கு இடையேயான முத்தரப்பு டி20 தொடர் வங்கதேசத்தில் நடைபெற்றுவருகிறது. இதில் நேற்று நடைபெற்ற நான்காவது போட்டியில் வங்கதேச அணி ஜிம்பாப்வே அணியை எதிர்கொண்டது.
இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி களமிறங்கிய வங்கதேச அணியின் தொடக்க ஆட்டகாரர்கள் லிட்டன் தாஸ், நஜ்முல் ஹொசைன் சிறப்பான தொடக்கத்தை அளித்தனர்.
நஜ்முல் ஹொசைன் 11 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜர்விஸ் வீசிய பந்தில் அவரிடமே கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார். மறுமுனையில் சிறப்பாக விளையாடி வந்த லிட்டன் தாஸும் 38 ரன்களில் வெளியேறினார். அதன்பிறகு களமிறங்கிய அணியின் கேப்டன் ஷகிப் அல் ஹசன் 10 ரன்களை மட்டும் எடுத்து வந்த வேகத்திலேயே நடையை கட்டினார்.
பந்தை சிக்ஸருக்கு விளாசிய முஹ்மதுல்லா பின்னர் முஷ்பிஹூர் ரஹிமுடன் ஜோடி சேர்ந்த மஹ்மதுல்லா அதிரடி ஆட்டத்தில் ஈடுபட்டார். முஷ்பிஹூர் 32 ரன்கள் எடுத்திருந்த நிலையில் தனது விக்கெட்டை இழ்ந்து வெளியேறினார். மறுமுனையில் ஆடிவந்த மஹ்மதுல்லா அரைசதமடித்து அசத்தினார். அவர் 41 பந்துகளிலில் ஐந்து சிக்சர், ஒரு பவுண்டரி உள்பட 62 ரன்களை விளாசினார்.
இதன்மூலம் வங்கதேச அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் ஏழு விக்கெட்டுகளை இழந்து 175 ரன்களை எடுத்தது. ஜிம்பாப்வே அணி சார்பில் கெய்ல் ஜர்விஸ் மூன்று விக்கெட்டுகளை எடுத்தார்.
176 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஜிம்பாப்வே அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியாக இருந்தது. அந்த அணியின் தொடக்க வீரர் பிராண்டன் டெய்லர், ரெஜிஸ் சகாப்வா ரன்கள் ஏதுமெடுக்காமல் அடுத்தடுத்து தங்களது விக்கெட்டுகளை இழந்தனர். அதனைத் தொடர்ந்து களமிறங்கிய வீரர்களும் சொற்ப ரன்களில் வெளியேறியதால் 10 ஓவர்களுகுள் அந்த அணி ஏழு விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
டி20 கிரிக்கெட்டில் 50ஆவது விக்கெட்டை பதிவு செய்தார் முஸ்தபிசூர் அதன்பின் எட்டாவது விக்கெட்டுக்கு ஜோடிசேர்ந்த ரிச்மண்ட் முத்தும்பாமி, கெய்ல் ஜர்விஸ் அணியை சரிவிலிருந்து மீட்டனர். சிறப்பாக விளையாடிய முத்தும்பாமி தனது முதல் சர்வதேச டி20 அரைசதத்தை பதிவுசெய்தார். 27 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஜர்விஸின் விக்கெட்டை வீழ்த்திய முஸ்தபிசூர் ரஹ்மான் டி20 போட்டிகளில் தனது 50ஆவது விக்கெட்டை கைப்பற்றினார்.
விக்கெட் வீழ்த்திய மகிழ்ச்சியில் ஷபியுல் இஸ்லாம் ஜிம்பாப்வே அணி 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 136 ரன்களை மட்டுமே எடுத்தது. வங்கதேச அணி சார்பில் ஷபியுல் இஸ்லாம் மூன்று விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதன்மூலம் வங்கதேச அணி 39 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று முத்தரப்பு டி20 தொடரின் இறுதி போட்டிக்கான இடத்தை உறுதிசெய்தது. அணியின் வெற்றிக்கு உதவிய முஹ்மதுல்லா ஆட்டநாயகனாகத் தேர்வுசெய்யப்பட்டார்.