தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 14, 2019, 5:50 PM IST

ETV Bharat / sports

இலங்கை சுழலில் திணறும் நியூசிலாந்து

இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல்நாள் முடிவில் நியூசிலாந்து அணி ஐந்து விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்துள்ளது.

இலங்கை சுழலில் திணறும் நியூசிலாந்து

உலகக்கோப்பைக்கு பிறகு, நியூசிலாந்து அணி இரண்டு டெஸ்ட், மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுவதற்காக இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளது. இதில், இவ்விரு அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி இன்று காலேவில் தொடங்கியது. இதில், டாஸ் வென்ற நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் முதலில் பேட்டிங் செய்ய தீர்மானித்தார்.

அதன்படி, முதலில் பேட்டிங் செய்யவந்த நியூசிலாந்து அணிக்கு தொடக்கமே சறுக்கலாக அமைந்தது. இலங்கை அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் உணவு இடைவேளையில் மூன்று விக்கெட்டுகளை இழந்து 95 ரன்களை எடுத்திருந்தது. மிகவும் எதிர்பார்த்த நியூசிலாந்து அணியின் கேப்டன் வில்லியம்சன் ரன் ஏதும் எடுக்காமல் அவுட் ஆனார்.

இதைத் தொடர்ந்து, ராஸ் டெய்லர் - ஹென்றி நிக்கோலஸ் ஜோடி நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தியது. இந்த ஜோடி 100 ரன்களை சேர்த்த நிலையில், நிக்கோலஸ் 42 ரன்களில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து வந்த வாட்லிங் ஒரு ரன்னில் பெவிலியனுக்கு நடையைக் கட்டினார்.

நியூசிலாந்து அணி 68 ஓவர்களில் ஐந்து விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்திருந்தபோது மழைக் குறுக்கிட்டதால் முதல் நாள் ஆட்டம் முடிவுக்கு வந்தது. ராஸ் டெய்லர் 86 ரன்களுடனும், சான்ட்னர் எட்டு ரன்களுடனும் களத்தில் உள்ளனர். இலங்கை அணி தரப்பில், ஐந்து விக்கெட்டுகளையுமே சுழற்பந்துவீச்சாளர் அகிலா தனஞ்சயா கைப்பற்றினார்.

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details