ரசிகர்களின் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் ஐஎஸ்எல் தொடரின் ஏழாவது சீசன் நடைபெற்று வருகிறது.
இதில் இன்று நடைபெற்ற லீக் ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சி அணி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதின.
தொடக்கம் முதலே இரு அணியும் அட்டாக்கிங் ஆட்டத்தை வெளிப்படுத்தியதால் ஆட்டத்தில் அனல் பறந்தது.
ஆட்டம் தொடங்கிய மூன்றாவது நிமிடத்திலேயே நார்த் ஈஸ்ட் அணியின் ரோச்சார்செலா கோலடித்து அசத்தினார்.
இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் பெங்களூரு எஃப்சி அணியின் ஜுனான் ஆட்டத்தின் 13ஆவது நிடத்தில் கோலடித்தார்.
இதனால் முதல் பாதி ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா ஒரு கோல் என்ற கணக்கில் சமநிலையில் இருந்தது.
தொடர்ந்து நடைபெற்ற இரண்டாம் பாதி ஆட்டத்திலும் இரு அணி விரர்களுக்கு ஒருவருக்கொருவர் அசத்தலான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.
அதன்படி ஆட்டத்தின் 70ஆவது நிமிடத்தில் பெங்களூரு எஃப்சி அணியின் உதாந்தா சிங் கோலடிக்க, அதற்கடுத்த எட்டாவது நிமிடத்தில் நார்த் ஈஸ்ட் அணியின் லூயிஸ் மச்சாடோ கோலடித்து அசத்தினார்.
ஆட்டநேர முடிவில் இரு அணிகளும் தலா 2 கோல்களை அடுத்து சமநிலையில் இருந்தனர்.
இதனால் பெங்களூரு எஃப்சி - நார்த் ஈஸ்ட் யுனைடெட் அணிகள் மோதிய ஆட்டம் டிராவில் முடிவடைந்ததாக அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க:‘தாராள மனசு பாண்டியா’: நடராஜனிடம் தொடர் நாயகன் விருதை வழங்கிய ஹர்திக்!