இந்தியா-வங்கதேசம் அணிகளுக்கு இடையான டெஸ்ட போட்டி 22ஆம் தேதி தொடங்கி 26ஆம் தேதிவரை கொல்கத்தாவின் ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெறுகிறது. இதனிடையே இந்தியா-வங்கதேசம் இடையிலான 20 ஓவர் கிரிக்கெட் தொடருக்கான போட்டி அட்டவணை நேற்று வெளியிடப்பட்டது.
இந்தப் போட்டியைக் காணவருமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் வங்கதேச பிரதமர் ஷேக் ஹசீனாவுக்கும் கிரிக்கெட் சங்கம் அழைப்பு விடுத்துள்ளது. அழைப்பை ஏற்பது தொடர்பாக இருநாட்டுத் தலைவர்களிடமுமிருந்து விரைவில் அறிவிப்பு வெளியாக வாய்ப்பு இருப்பதாகக் கூறப்படுகிறது.