வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னாள் வீரரும் கிரிக்கெட் ஜாம்பவான்களில் ஒருவருமான பிரைன் லாரா இந்திய அணியையும், வேகப்பந்து வீச்சாளர்களைப் பற்றியும் கருத்து தெரிவித்துள்ளார்.
அவர் கூறுகையில், இந்திய அணியின் வேகப்பந்து வீச்சாளர்கள் முகமது ஷமி, ஜாஸ்ப்ரிட் பும்ரா, உமேஷ் யாதவ், இஷாந்த் ஷர்மா ஆகியோரை காணும் பொழுது 1980களில் விளையாடிய வெஸ்ட் இண்டீஸ் அணியை நினைவு கூறுகின்றனர். 2018ஆம் ஆண்டு சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் மட்டும் இந்த பந்துவீச்சாளர்கள் மொத்தமாக 142 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளனர் என பாராட்டியுள்ளார்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி குறித்து லாரா கூறுகையில், விராட் கோலி இந்திய அணியின் அற்புதமான கேப்டன். அவருடைய சிறப்பான ஆட்டத்தின் மூலம் அணியின் தலைமைக்கு உதாரணமாக விளங்குகிறார். இவருக்கு அடித்தளம் அமைத்துக் கொடுத்த தோனியின் தலைமையிலிருந்து சிறப்பாக வந்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.
விராட் கோலி தலைமையிலான இந்திய அணி தொடர்ச்சியாக 11 டெஸ்ட் தொடர்களைக் கைப்பற்றி 80, 90களில் நான் கண்ட வெஸ்ட் இண்டீஸ் அணியை நினைவு படுத்துகின்றனர் என்று கூறினார்.
இதையும் படிங்க: ரெடியான 90ஸ் லெஜண்ட்ஸ்... போட்றா வெடிய