தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

மூன்றாவது டெஸ்ட்: தடுமாற்றத்தில் இந்தியா!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 180 ரன்களை எடுத்துள்ளது.

By

Published : Jan 9, 2021, 7:30 AM IST

India Vs Australia: 3RD Test Lunch, Day 3
India Vs Australia: 3RD Test Lunch, Day 3

சிட்னியில் நடைபெற்று வரும் இந்திய - ஆஸ்திரேலிய அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று(ஜனவரி 9) தொடங்கியது. முன்னதாக இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி, தனது முதல் இன்னிங்ஸில் 2 விக்கெட்டுகளை இழந்து 96 ரன்களை மட்டுமே எடுத்திருந்தது.

அதன்பின் 242 ரன்கள் பின் தங்கிய நிலையில் மூன்றாம் நாள் ஆட்டத்தை இந்திய அணியின் ரஹானே 5 ரன்களுடனும், புஜாரா 9 ரன்களுடனும் தொடங்கினர். இதில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வந்த ரஹானே 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸ் வீசிய பந்துவீச்சில் எதிர்பாராதவிதமாக போல்டானார்.

அவரைத் தொடர்ந்து வந்த ஹனுமா விஹாரியும் 4 ரன்களில் ரன் அவுட்டாகி பெவிலியன் திரும்பினார். அதன்பின் ஜோடி சேர்ந்த புஜாரா - ரிஷப் பந்த் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தி வருகிறது.

இதன் மூலம் மூன்றாம் நாள் உணவு இடைவேளையின்போது இந்திய அணி நான்கு விக்கெட்டுகளை இழந்து, 180 ரன்களை எடுத்துள்ளது. இந்திய அணி தரப்பில் புஜாரா 42 ரன்களுடனும், ரிஷப் பந்த் 29 ரன்களுடனும் களத்தில் உள்ளனர். முதல் இன்னிங்ஸில் 158 ரன்கள் பின் தங்கிய நிலையில் இந்திய அணி உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: இந்திய குத்துச்சண்டை கூட்டமைப்பு தேர்தல் தேதி அறிவிப்பு!

ABOUT THE AUTHOR

...view details