தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

9 ஆயிரம் ரன்கள்... சச்சின் சாதனையை உடைத்த ரோஹித்!

பெங்களூரு: இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா, அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.

ind-vs-aus-rohit-sharma-achieves-this-milestone-breaks-sachins-record
ind-vs-aus-rohit-sharma-achieves-this-milestone-breaks-sachins-record

By

Published : Jan 20, 2020, 11:42 AM IST

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்திய அணியின் துணைக் கேப்டன் ரோஹித் சர்மா 119 ரன்களைக் குவித்தது வெற்றியில் முக்கியப் பங்கு வகித்தது. இதற்காக ரோஹித் சர்மா ஆட்டநாயகனாகத் தேர்வு செய்யப்பட்டார்.

ரோஹித் சாதனை

இதனிடையே ரோஹித் சர்மா இந்தப் போட்டியில் 4 ரன்கள் எடுத்திருந்தபோது 9 ஆயிரம் ரன்களைக் கடந்து சாதனைப் படைத்தார். இந்த சாதனையை ரோஹித் 216 இன்னிங்ஸ்களில் படைத்தார். இதன்மூலம் அதிவேகமாக 9 ஆயிரம் ரன்களைக் கடந்த மூன்றாவது வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார். இவருக்கு முன்னதாக கோலி 194 இன்னிங்ஸ்களிலும், டி வில்லியர்ஸ் 205 இன்னிங்ஸ்களிலும் 9 ஆயிரம் ரன்களைக் கடந்துள்ளனர்.

ரோஹித் சர்மாவுக்கு பின் சவுரவ் கங்குலி 228 இன்னிங்ஸ்களிலும், சச்சின் 235 இன்னிங்ஸ்களிலும், லாரா 239 இன்னிங்ஸ்களிலும் 9 ரன்களைக் கடந்தனர். மேலும் 9 ரன்களைக் கடந்த 6ஆவது இந்திய வீரர் ரோஹித் சர்மா என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தோனியின் சாதனையைத் தகர்த்த கோலி!

ABOUT THE AUTHOR

...view details