தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பாக்ஸிங் டே டெஸ்ட்: இந்திய அணிக்கு 70 ரன்கள் இலக்கு!

இதியாவுக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

By

Published : Dec 29, 2020, 7:41 AM IST

ind vs aus : 2 innings updates
ind vs aus : 2 innings updates

மெல்போர்னில் நடைபெற்று வரும் இந்தியா-ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ’பாக்ஸிங் டே’ டெஸ்ட் போட்டியின் நான்காம் நாள் ஆட்டம் இன்று (டிச.29) நடைபெற்றுவருகிறது.

இதில் 133 ரன்களுடன் இரண்டாவது இன்னிங்ஸைத் தொடர்ந்த ஆஸ்திரேலிய அணியின் காம்ரூன் கிரீன் - பாட் கம்மின்ஸ் இணை நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர்.

பின்னர் 22 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பாட் கம்மின்ஸ், பும்ராவின் பந்துவீச்சில் ஆட்டமிழக்க, அவரைத் தொடர்ந்து அரைசதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட காமரூன் கிரீனும் 45 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றமளித்தார்.

அவர்களைத் தொடர்ந்து வந்த மற்ற வீரர்களும் இந்திய அணியின் பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து சொற்ப ரன்களில் ஆட்டமிழந்து பெவிலியனுக்குத் திரும்பினர். இதனால் ஆஸ்திரேலிய அணி 200 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து இரண்டாவது இன்னிங்ஸை நிறைவு செய்தது.

இதன்மூலம் இந்திய அணிக்கு இலக்காக 70 ரன்களையும் நிர்ணயித்தது.

ஆஸ்திரேலிய அணி தரப்பில் அதிகபட்சமாக காமரூன் கிரீன் 45 ரன்களையும், மேத்யூ வேட் 40 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணி தரப்பில் முகமது சிராஜ் 3 விக்கெட்டுகளையும், பும்ரா, அஸ்வின், ஜடேஜா தலா 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

ஒதையும் படிங்க:கடந்த 10 ஆண்டுகளில் மனதுக்கு நெருக்கமான தருணங்களை பகிர்ந்த கோலி...

ABOUT THE AUTHOR

...view details