தென் ஆப்பிரிக்காவில் நடைபெற்று வரும் அண்டர் 19 உலகக்கோப்பை தொடர் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது. இதில் ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்துக்கொண்டிருக்கும் அரையிறுதி ஆட்டத்தில் இந்திய அண்டர் 19 அணி பாகிஸ்தான் அண்டர் 19 அணியை எதிர்கொள்கிறது.
இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கிடையேயான போட்டிகள் என்றாலே ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு நிலவும். அந்த வகையில் இன்று நடக்கும் இந்தியா - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான அரையிறுதிப் போட்டியும் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா அண்டர் 19:
இந்திய அணியைப் பொறுத்தவரை இத்தொடரில் ஒரு தோல்வியைக் கூட கண்டதில்லை. அதற்கு முக்கிய காரணமாக பேட்டிங்கில் யஷஸ்வி ஜெய்ஸ்வாலும் பந்துவீச்சில் கார்திக் தியாகியும் தங்களது செயலை சரிவர செய்ததன் காரணமாகவே தான்.
மேலும் இந்திய அணியின் கேப்டன் பிரியம் கார்க், சக்ஸேனா, ஆகாஷ் சிங், ரவின் பிஷ்னோய் என நட்சத்திர வீரர்களுக்கும் தங்களது ஒத்துழைப்பை சரிவர செய்துவருவதும் இந்திய அணிக்கு கூடுதல் பலத்தை தந்து வருகிறது.
இந்திய அணியின் கேப்டன் பிரியாம் கார்க் இன்றைய போட்டியில் இந்த வீரர்கள் தங்களது திறமையை வெளிப்படுத்தும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றியை யாராலும் தடுக்க இயலாது. பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என அனைத்து தரப்பிலும் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டுள்ளதால் இந்தப் போட்டியிலும் அதனை சிறப்பாகவே செய்யும் என ரசிகர்களால் எதிர்ப்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் அண்டர் 19:
பாகிஸ்தான் ஆணியையும் அவ்வளவு குறைத்து மதிப்பிட இயலாது. ஏனேனில் அந்த அணியும் இத்தொடரில் ஒரு தோல்வியைக் கூட தழுவியது இல்லை. அதேபோல் அந்த அணியின் கேப்டன் ரோஹைல் நசீர் உச்சகட்ட ஃபார்மில் உள்ளதால் இந்தப் போட்டியில் விறுவிறுப்புக்குப் பஞ்சமிருக்காது.
பாகிஸ்தான் அணியின் கேப்டன் ரோஹைல் நசீர் அதே சமயம் பந்துவீச்சில் முகமது அமீர், அபாஸ் அஃப்ரிடி என வேகப்பந்துவீச்சில் அசத்திவருகின்றனர். அதனால் இன்றைய போட்டியில் இவர்கள் நிச்சயம் இந்திய அணிக்கு நெருக்கடி கொடுப்பார்கள் எனபதால் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பும் அதிகரித்துள்ளது.
மைதானம்:
இன்றைய போட்டி தொடங்கவுள்ள பார்செஸ்ட்ரூம் மைதானம் முழுக்க முழுக்க பேட்ஸ்மேன்களுக்கு சாதகமான மைதானமாகும். இதனால் இந்தப்போட்டியில் சேஸிங் செய்யும் அணிக்கே வெற்றி வாய்ப்பு அதிகமாகவுள்ளதாக் கருத்து கணிப்புகள் கூறுகின்றன. அதனால் இந்தப் போட்டியில் டாஸும் முக்கிய பங்கு வகிக்கும் என்பதில் சந்தேகமில்லை.
இந்த உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி இதுவரை.. உத்தேச அணி விவரம்:
இந்தியா அண்டர் 19: யஷஸ்வி ஜெய்ஸ்வால், திவ்யான்ஷ் சக்சேனா, திலக் வர்மா, பிரியாம் கார்க் (கே), துருவ் ஜூரெல் , சித்தேஷ் வீர், அதர்வா அங்கோலேகர், ரவி பிஷ்னோய், சுஷாந்த் மிஸ்ரா, கார்த்திக் தியாகி, ஆகாஷ் சிங், வித்யாதர் பாட்டீல், சுபாங் கவ்
பாகிஸ்தான் அண்டர் 19: ஹைதர் அலி, முகமது ஹுரைரா, ரோஹைல் நசீர் (கே), ஃபஹத் முனீர், காசிம் அக்ரம், முகமது ஹரிஸ், இர்பான் கான், அப்பாஸ் அஃப்ரிடி, தாஹிர் உசேன், அமீர் அலி, முகமது அமீர் கான், முகமது வாசிம் ஜூனியர், அப்துல் பங்கல்ஷாய், முஹம்மது அர்ஹத் அலி கான்
இதையும் படிங்க: ஐசிசி டி20 பட்டியலில் டாப் 2-க்கு முன்னேறிய கே.எல். ராகுல்!