தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

இப்போதே சூடுபிடித்த ஐசிசி தேர்தல்!

ஐசிசி தலைவருக்கான தேர்தல் தொடர்பாக இங்கிலாந்து-வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்களிடையே பணப்பரிமாற்றம் நடந்ததாக தற்போது ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகர் அச்சம் தெரிவித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

icc-elections-huge-blow-for-manohar-as-ethics-officer-clears-colin-graves
icc-elections-huge-blow-for-manohar-as-ethics-officer-clears-colin-graves

By

Published : May 25, 2020, 4:39 PM IST

ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகரின் பதவிக்காலம் வரும் ஜூன் மாதத்துடன் முடிவடையவுள்ளது. இதனால் அடுத்த தலைவராக யார் வருவார் என எதிர்பார்க்கப்படும் நிலையில், இப்போதே ஐசிசி தலைவருக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது.

அடுத்த தலைவராக இங்கிலாந்து வாரியத் தலைவராக இருக்கும் காலின் கிரேஸ் வர அதிக வாய்ப்புள்ளதாக சில நாள்களுக்கு முன்னதாக தகவல்கள் வெளியாகின.

காலின் கிரேஸ்

இந்நிலையில் ஐசிசி தலைவர் ஷாஷங்க் மனோகர், ஐசிசி தலைவர் தேர்தலுக்காக இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் ஆகிய கிரிக்கெட் வாரியங்களுக்கு இடையே பணப்பரிமாற்றம் நடந்ததாக அச்சம் தெரிவித்திருந்தார்.

ஷாஷங்க் மனோகர்

இதையடுத்து இந்த விவகாரம் ஐசிசி அறநெறி அலுவலரின் விசாரணைக்குச் சென்றது.

அதை விசாரித்த அறநெறி அலுவலர், ''இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியங்களுக்கிடையே நடந்த பணப்பரிமாற்றத்தில் எவ்வித விதிகளும் மீறப்படவில்லை. ஐசிசி தலைவர் பதவிக்காகப் பணம் கொடுத்ததாக எவ்வித அடிப்படை சந்தேகங்களும் வரவில்லை.

இந்நேரத்தில் இருநாட்டு கிரிக்கெட் வாரியங்களுக்கும் இடையே இந்தப் பணப்பரிமாற்றம் ஏற்புடையதே" எனக் கூறி, இந்த விவகாரத்தை தள்ளுபடி செய்தார்.

இதையும் படிங்க:தி எண்ட் ஆஃப் எரா’ ஹாக்கி ஜாம்பவான் பல்பீர் சிங் மறைவு!

ABOUT THE AUTHOR

...view details