ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி நான்கு போட்டிகள் கொண்ட பார்டர் கவாஸ்கர் டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. இதில் டிசம்பர் 17ஆம் தேதி தொடங்கி இன்று முடிந்த முதலாவது டெஸ்ட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி எட்டு விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
விராட் கோலி தலைமையில் இந்திய டெஸ்ட் அணி:
சறுக்கல்:
இப்போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸில் இந்திய அணி வெறும் 36 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதனால் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகக்குறைந்த ஸ்கோரை எடுத்த அணி என்ற மோசமான சாதனையை படைத்துள்ளது.
அதிலும் இப்போட்டியில் களமிறங்கிய இந்திய வீரர்களில் எவரும் இரட்டை இலக்க ரன்களை தொடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சாதனை:
ஆனால் கடந்த 2016ஆம் ஆண்டு சென்னையில் நடைபெற்ற இங்கிலாந்து அணிக்கெதிரான டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 759 ரன்களை எடுத்து டிக்ளேர் செய்தது. அப்போட்டியில் இந்திய அணியின் கருண் நாயர் முச்சதம் விளாசியும் அசத்தினார்.
இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் இந்திய அணி எடுத்த அதிகபட்ச ரன்னாகவும் இது அமைந்தது. மேலும் அப்போட்டியில் இந்திய அணி 76 ரன்கள் மற்றும் இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றியை பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:பகலிரவு டெஸ்ட்: வரலாற்றில் மிகக்குறைந்த ரன்னை எடுத்த இந்தியா