ஹர்பஜன் சிங் சிஎஸ்கே அணிக்காக ஆட வந்ததிலிருந்து தமிழராகவே மாறி விட்டார்.அதை நியாயப்படுத்தும் விதமாகத் தமிழ் மொழி கற்றுக்கொண்டும் தமிழ்ப் பண்பாட்டை பின்பற்றும் வகையில் சிலம்பம் சுற்றுவது தமிழர் விழாக்களுக்குத் தமிழில் வாழ்த்து சொல்வது என முழுக்க தமிழராகவே மாறிப்போனார்.
தமிழர்களின் வாழ்த்து மழையில் நனையும் வடநாட்டு திருவள்ளுவர்!
முன்னாள் இந்திய பவுலரும் சிஎஸ்கே அணியின் நட்சத்திர வீரருமான ஹர்பஜன் சிங்கிற்கு இன்று பிறந்தநாள் என்பதால் அவருக்கு தமிழ் ரசிகர்கள் வாழ்த்து மழையில் நனைய வைத்தனர்.
இதனால் தமிழ் ரசிகர்கள் அவரை செல்லமாக 'புலவர்', 'திருவள்ளுவர்' என அழைத்து பெருமைப்படுத்தினர். இதோடு விட்டுவிடாமல் அவரின் பிறந்தநாளான இன்று அவரை வாழ்த்துக் கூறி அவரை உருக வைத்துள்ளனர். தமிழ் மக்களுக்கு நன்றி கூறும் விதமாக தற்போது பெரு மகிழ்வுடன் ட்விட்டர் பதிவு ஒன்றைப் பகிர்ந்துள்ளார்.
அதில் "என் பிறந்தநாள்ல என்ன வாழ்த்துன தமிழ் உறவுகள் எல்லாருக்குமே ரொம்ப நன்றி. இன்னுமும் வாழ்த்துகள் வந்துகிட்டே இருக்கு. ஆனந்தக் கண்ணீர் சொல்ற தருணம் இதுதான்னு எனக்கு தோணுது. இந்த அன்பும் ஆதரவும் என்னைக்கும் தொடரனும். தமிழ் மற்றும் சிஎஸ்கே ரசிகர்களால் நான்" என்று குறிப்பிட்டிருந்தார்.