தமிழ்நாடு

tamil nadu

By

Published : Oct 31, 2019, 12:22 PM IST

ETV Bharat / sports

அணிக்கு ரீஎண்ட்ரி கொடுத்த முன்னாள் கேப்டன் - இவர் தான் ஃபர்ஸ்ட்!

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டன் ஹாமில்டன் மசகட்சா ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் முதல் இயக்குநராக நியமிக்கப்பட்டுள்ளார்.

zimbabey cricket director

ஜிம்பாப்வே அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி கிரிக்கெட் வீரருமான ஹாமில்டன் மசகட்சா, ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தில் முதல் இயக்குநராக அடுத்த மாதம் நியமிக்கப்படவுள்ளார்.

இவரின் இந்த பதவியானது, கிரிக்கெட் வாரியத்தில் உள்ள மூத்த கிரிக்கெட் தொழில்நுட்ப ஊழியர்களின் ஆட்சேர்ப்பு, அணியின் மேலாண்மை, வீரகளுக்கு பயிற்சி குறித்த திட்டங்கள், அணியை முன்னேற்ற பாதைக்கு கொண்டு சேர்பதற்கான வழிமுறைகளை உருவாக்குதல் போன்றவையாகும்.

சுமார் 19 ஆண்டுகாலமாக ஜிம்பாப்வே அணியில் விளையாடி வரும் ஹாமில்டன் மசகட்சா 68 டெஸ்ட், 209 ஒருநாள், 66 டி20 போட்டிகளில் பங்கேற்றவர். இவர் ஜிம்பாப்வே அணியின் மூன்று வடிவிலான (டெஸ்ட், டி20, ஒருநாள் தொடர்) கிரிக்கெட் அணிக்கும் கேப்டனாக செயல்படும் போதே தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதுகுறித்து ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்தின் தலைவர் தவேங்வா முகுஹ்லானி கூறுகையில், ஹாமில்டன் மசகட்சா, இதுவரை அணித்தலைவராக வழிநடத்தியதை போலவே, அவர் மீண்டும் அணியின் ஒரு அங்கமாக செயல் படவுள்ளார். இதனால் ஜிம்பாப்வே அணிக்கு ஹாமில்டன் உத்வேகத்தை அளிப்பார் என தெரிவித்துள்ளார்.

36 வயதான ஹாமில்டன் மசகட்சா கடந்த மாதம் வங்கதேசத்தில் நடைபெற்ற முத்தரப்பு டி20 தொடரின்போது தனது ஓய்வு முடிவை அறிவித்தார்.

இதையும் படிங்க: "எமோஷனலா இருக்கு, ஆனா எந்த வருத்தமும் இல்ல" - ஓய்வு குறித்து மனம் திறக்கும் ஹாமில்டன் மசகட்சா #HamiltonMasakadza

For All Latest Updates

ABOUT THE AUTHOR

...view details