தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

பும்ராவின் பரிசோதனையை மறுத்த என்.சி.ஏ.! டிராவிட்டுடன் பேசவுள்ள கங்குலி!

பெங்களூருவில் உள்ள தேசிய கிரிக்கெட் அகாதெமி (என்.சி.ஏ.), இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளர் ஜஸ்பிரீத் பும்ராவின் உடற்பயிற்சி சோதனையை நடத்த மறுத்ததைத் தொடர்ந்து பி.சி.சி.ஐ. தலைவர் சவுரவ் கங்குலி, என்.சி.ஏ. தலைவரான ராகுல் டிராவிட்டை சந்திக்கவுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

By

Published : Dec 20, 2019, 6:50 PM IST

Ganguly to speak to Dravid
Ganguly to speak to Dravid

இந்திய அணியின் நட்சத்திர பந்துவீச்சாளராக வலம்வருபவர் ஜஸ்பிரீத் பும்ரா. கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான தொடரின்போது இவருக்கு முதுகுப் பகுதியில் காயம் ஏற்பட்டது.

இதன் காரணமாக இவர் இந்தியாவில் நடைபெற்ற தென் ஆப்பிரிக்கா, வங்கதேசம், வெஸ்ட் இண்டீஸ் தொடர்களில் பங்கேற்காமல் லண்டனில் சிகிச்சை பெற்றுவந்தார். இந்நிலையில் காயத்திலிருந்து மீண்ட இவர் கடந்த 17ஆம் தேதி விசாகப்பட்டினத்தில் இந்திய அணியின் வலைப்பயிற்சியில் பந்துவீசினார்.

இந்திய அணியில் இணைந்த பும்ரா

மேலும் இவர் அடுத்த ஆண்டு ஆஸ்திரேலிய அணியுடனான தொடரின்போதுதான் அணியில் பங்கேற்பார் என்று அணியின் பயிற்சியாளர் தெரிவித்திருந்தார். மேலும் இவரின் உடல்நிலை குறித்து இந்திய கிரிக்கெட் அகாதெமியில் பரிசோதனை செய்யவுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகின.

ஆனால் என்.சி.ஏ. பும்ராவின் பரிசோதனையை செய்ய முன்வரப்போவதில்லை என முடிவெடுத்துள்ளது. ஏனெனில், பும்ரா தனது காயத்திற்கு அணுகியது லண்டனைத்தான்; தங்களை அல்ல என என்.சி.ஏ. பதிலளித்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வலைப்பயிற்சியில் பந்துவீசிய பும்ரா

தற்போது இந்தப் பிரச்னையில் பிசிசிஐயின் தலைவரான கங்குலி கூறுகையில், "ஒவ்வொரு சர்வதேச கிரிக்கெட் வீரரின் முதலும் கடைசியுமான சோதனையாக என்.சி.ஏ.வாகத்தான் இருக்க வேண்டும். தற்போது பும்ராவின் பிரச்னை குறித்து கூடியவிரைவில் காரணத்தை கண்டுபிடிப்பேன்" என உறுதியளித்தார்.

மேலும் அவர் கூறுகையில், தான் இது குறித்து ராகுலுடன் பேசவுள்ளதாகவும் இதுபற்றி அவரிடம் பேசினால் அனைத்தும் சரியாகிவிடும் எனவும் நம்பிக்கைத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:11 வயதில் பானிபூரி பாய்... 17 வயதில் ரூ. 2.4 கோடிக்கு ஏலம் - தந்தை பெருமிதம்!

ABOUT THE AUTHOR

...view details