இந்திய அணியின் முன்னாள் நட்சத்திர வேகப்பந்து வீச்சாளராக வலம்வந்தவர் ஸ்ரீசாந்த். இவர் 2007ஆம் ஆண்டு டி20 உலகக் கோப்பை, 2011 ஒருநாள் உலகக் கோப்பை வென்ற இந்திய அணியில் இடம்பெற்றிருந்தார். இந்நிலையில் கரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக ஐசிசி, தற்போது கிரிக்கெட் வீரர்கள் உமிழ்நீரை கொண்டு பந்தை பளபளப்பாக்க கூடாது என தடை விதித்துள்ளது.
'பந்துகளை பளபளப்பாக மாற்ற உமிழ்நீர் அவசியமில்லை'- ஸ்ரீசாந்த் பிரத்யேக பேட்டி
இந்தியாவின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் ஸ்ரீசாந்த், ஈடிவி பாரத் உடனான ஒரு பிரத்யேக பேட்டியில், கிரிக்கெட் பந்துகளை பிரகாசிக்க உமிழ்நீரை பயன்படுத்துவதற்கு பதிலாக வியர்வையைப் பயன்படுத்தலாம் என்று பரிந்துரைத்தார்.
இதுகுறித்து ஈடிவி பாரத்திடம் பேசிய ஸ்ரீசாந்த், 'உமிழ்நீர் தடை கிரிக்கெட்டை பாதிக்காது என்று நான் கூறுவேன். ஏனென்றால் நீங்கள் ஒரு யார்க்கர் பந்து வீச வேண்டுமானால், தலைகீழ் ஸ்விங்கினால் மட்டுமே பந்துவீச முடியும். மாறாக சாதாரண முறையில் அல்ல. உமிழ்நீர் தடையினால் வீரர்கள் தங்களது வியர்வையை வைத்து பந்தை பராமரிக்கவும் முடியும்.
எப்படியிருந்தாலும், தற்போது பந்துவீச்சாளர்கள் ஐசிசியின் தடையினால் தயக்கமடைந்துள்ளனர். ஆனால் உமிழ்நீரை பயன்படுத்தாமல் பந்து அதிகம் பாதிக்கப்படும் என்று நான் நினைக்கவில்லை. இத்தடையினால் எந்தவொரு பந்து வீச்சாளரும் விக்கெட்டை எடுக்காமல், ரோபோவாக மாற மாட்டார்கள் என்று நினைக்கிறேன்' என்று தெரிவித்துள்ளார்.