தமிழ்நாடு

tamil nadu

ஒரே நேரத்தில் டி20 சேலஞ்சர், மகளிர் பிக் பாஷ் நடந்தால் அது பெரும் இழப்பு...!

மகளிருக்கான டி20 சேலஞ்சர் தொடர் மற்றும் மகளிர் பிக் பாஷ் தொடர் ஒரே நேரத்தில் நடத்தப்பட்டால், அது வீராங்கனைகளுக்கு பெரும் விளைவை ஏற்படுத்தும் என வங்கதேச வீராங்கனை ஜகானரா ஆலம் தெரிவித்துள்ளார்.

By

Published : Sep 26, 2020, 6:26 AM IST

Published : Sep 26, 2020, 6:26 AM IST

exclusive-jahanara-alam-concerned-about-wbbl-and-wt20-challenger-schedule-clash
exclusive-jahanara-alam-concerned-about-wbbl-and-wt20-challenger-schedule-clash

வங்கதேசத மகளிர் கிரிக்கெட் நட்சத்திர வீராங்கனை ஜகானரா ஆலம். இவர் ஈடிவி பாரத் செய்திகளுக்கு கொடுத்த பிரத்யேக பேட்டியில், ''கரோனா வைரஸ் பாதிப்பால் மகளிர் டி20 சேலஞ்சர் தொடர் மற்றும் மகளிர் பிக் பாஷ் தொடர் ஆகியவற்றுக்கான அட்டவணையில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

இரண்டு தொடரும் ஒரே நேரத்தில் நடந்தால் அது அனைத்து வீராங்கனைகளுக்கும் பெரும் பிரச்னைதான். ஏனென்றால் டி20 சேலஞ்சர் தொடர் நடந்தால் பிக் பாஷ் தொடரில் இந்திய வீராங்கனைகள் பங்கேற்க முடியாது. அதேபோல் இலங்கை அணியின் முக்கிய வீராங்கனைகளும் ஒரே ஒரு தொடரில் மட்டுமே பங்கேற்க முடியும்.

ஜகானரா ஆலமின் பிரெத்யேக பேட்டி

இந்த நேரத்தில் கிரிக்கெட் மீண்டும் பழைய சூழலுக்கு திரும்பியுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது. டி20 சேலஞ்சர் தொடரில் ஆடுவதற்கு எனக்கு வாய்ப்புக் கிடைத்தால் நிச்சயம் மகிழ்ச்சியடைவேன். ஆனால் அதுபற்றிய எந்தவொரு தகவலும் தற்போது என்னிடம் இல்லை'' என்றார்.

இதையும் படிங்க:ஐபிஎல் 2020: சென்னை அணியை வீழ்த்தி டெல்லி அணி அசத்தல் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details