தமிழ்நாடு

tamil nadu

By

Published : Aug 5, 2019, 9:55 AM IST

ETV Bharat / sports

டான் பிராட்மேனின் சாதனையை நெருங்கும் ஸ்டீவன் ஸ்மித்!

லண்டன்: இங்கிலாந்து அணிக்கு எதிராக சதம் அடித்ததன் மூலம், ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் வீரர் டான் பிராட்மேனின் சாதனையை தகர்க்க ஸ்டீவன் ஸ்மித் நெருங்கி வருகிறார்.

Don Bradman has more Test centuries for Australia against England than Steve Smith

டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 119 இன்னிங்ஸில் 25 சதங்களை அடித்தவர் பட்டியலில் இரண்டாம் இடம் பிடித்தார் ஸ்டீவன் ஸ்மித். இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது இன்னிங்சின்போது அவர் இந்த சாதனையை நிகழ்த்தினார். ஸ்மித் தனது 25ஆவது சதத்தை 119 வது இன்னிங்சில் பதிவு செய்தார். மேலும் 127 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை நிகழ்த்திய இந்திய கேப்டன் விராட் கோலியை பின்னுக்கு தள்ளியுள்ளார்.

ஸ்டீவன் ஸ்மித்

முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் தனது 130ஆவது டெஸ்ட் இன்னிங்ஸில் இந்த மைல்கல்லை எட்டினார். இருப்பினும், 68 இன்னிங்ஸ்களில் 25 சதங்கள் அடித்த ஆஸ்திரேலிய அணியின் டான் பிராட்மேனின் சாதனை இதுவரை யாராலும் நெருங்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சாதனையுடன், ஆஷஸ் டெஸ்டின் இரு இன்னிங்ஸ்களிலும் சதங்களை பதிவு செய்த ஐந்தாவது ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் என்ற பெருமையையும் ஸ்மித் பெற்றார். மேலும் இவர் அடித்த 25 சதங்களில் 10 சதங்கள் இங்கிலாந்து அணிக்கு எதிரானதாகும்.

இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு எதிராக ஒரு ஆஸ்திரேலிய வீரரால் அடிக்கப்பட்ட இரண்டாவது அதிக சதங்கள் என்ற சாதனைக்கும் சொந்தகாரர் ஆனார் ஸ்மித். இதற்கு முன் ஆஸ்திரேலிய அணியின் ஜாம்பவான் டான் பிராட் மேட் இங்கிலாந்துக்கு எதிராக 19 சதங்கள் அடித்துள்ளார்.

இதுகுறித்து இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் கூறுகையில், ஸ்மித்தை “விளையாடும் நேரத்திலும் சரி, மற்ற நேரங்களில் பார்க்கும் போதும் சரி நான் பார்த்த சிறந்த டெஸ்ட் தொடர் பேட்ஸ்மேன். இவர் ஒரு மேதை” என்று ட்வீட் செய்துள்ளார்.

ABOUT THE AUTHOR

...view details