தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

அது கோலியின் விருப்பம் - பேட்டிங் வரிசை குறித்து ஷிகர் தவான்

ஒருநாள் போட்டியில் எந்த வரிசையில் களமிறங்க வேண்டும் என்பது கோலியின் தனிப்பட்ட விருப்பம் என இந்திய அணியின் தொடக்க வீரர் ஷிகர் தவான் தெரிவித்துள்ளார்.

Virat Kohli will decide where he wants to bat
Virat Kohli will decide where he wants to bat

By

Published : Jan 15, 2020, 2:00 PM IST

இந்தியாவுக்கு எதிராக மும்பையில் நடைபெற்ற முதல் ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. சொந்த மண்ணில் இந்திய அணி தோல்வி அடைந்தது குறித்து பலரும் பலவிதமான கருத்துகளைத் தெரிவித்துவந்த நிலையில், தோல்வி குறித்து தொடக்க வீரர் ஷிகர் தவான் கூறுகையில்,

"கே.எல். ராகுல் அவுட்டானபோது அணியின் ஸ்கோரை உயர்த்த முயற்சித்தோம். ஆனால் அதற்குள் அடுத்தடுத்து நான்கு விக்கெட்டுகளை இழந்ததால் எங்களது ஆட்டம் பாதிப்படைந்தது. 300 ரன்கள் அடிக்கக்கூடிய வான்கடே போன்ற ஆடுகளத்தில் எங்களால் 255 ரன்களை மட்டுமே எட்ட முடிந்தது. பவுலிங்கிலும் ஆட்டத்தின் தொடக்கத்திலேயே ஆஸ்திரேலிய அணியின் தொடக்க வீரர்களான வார்னர், ஃபின்ச் ஆகியோரை அவுட் செய்ய முடியாமல்போனது.

ஷிகர் தவான்

பேட்டிங், பவுலிங், ஃபீல்டிங் என மூன்று பிரிவுகளிலும் ஆஸ்திரேலிய அணி சிறப்பாக விளையாடியது. நாங்கள் எங்கு தவறு செய்தோம் என்பதை கண்டறிந்து அதை சரிசெய்து மீண்டுவருவோம். இந்தியா வலுவான அணி என்பதால் இன்னும் அதிக வலிமையுடன் அடுத்தப் போட்டியில் களமிறங்குவோம்" என்றார்.

மேலும், விராட் கோலி பேட்டிங் வரிசையில் மாறி களமிறங்கியது குறித்து பேசிய தவான், "அது கேப்டனின் விருப்பம். அவர் எந்த வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என விரும்புகிறாரோ அந்த வரிசையில் விளையாடுவார்" எனத் தெரிவித்தார்.

கோலி

முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி 255 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில், அதிகபட்சமாக ஷிகர் தவான் 74 ரன்கள் அடித்தார். வழக்கமாக மூன்றாவது வரிசையில் களமிறங்கி பல்வேறு சாதனைகளைப் படைத்த கோலி நேற்றைய ஆட்டத்தில் ஐந்தாண்டுகளுக்கு பின் நான்காவது வரிசையில் களமிறங்கி 16 ரன்களியே ஆட்டமிழந்தார். கோலி தனது பேட்டிங் வரிசையை மாற்றியதுதான் இந்திய அணி தோல்விக்கு முக்கியக் காரணம் என இணையவாசிகள் சமூக வலைதளங்களில் விமர்சனம் செய்துவருகின்றனர்.

நாளை மறுநாள் ராஜ்கோட்டில் நடைபெறும் இரண்டாவது போட்டியிலாவது இந்திய அணி வெற்றிபெற்று மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் உயிர்ப்புடன் இருக்குமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இதையும் படிங்க:14 ஆண்டுகளுக்குப் பின் இந்திய அணியின் மோசமான தோல்வி... கோலி சொன்ன காரணம் என்ன?

ABOUT THE AUTHOR

...view details