தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sports

கிரேம் ஸ்மித்தின் பதவிக் காலம் நீட்டிப்பு - ரசிகர்கள் மகிழ்ச்சி!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் (சிஎஸ்ஏ) இயக்குநர் கிரேம் ஸ்மித்தின் பதவிக் காலம் மேலும் இரண்டு ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

csa-extends-graeme-smiths-contract-as-director-of-cricket
csa-extends-graeme-smiths-contract-as-director-of-cricket

By

Published : Apr 17, 2020, 5:57 PM IST

கோவிட்-19 பெருந்தொற்றுக் காரணமாக உலகம் முழுவதும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால இயக்குநரான கிரேம் ஸ்மித்தின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடையவுள்ள நிலையில், சிஎஸ்ஏ உறுப்பினர்களின் கூட்டம் காணொலி வாயிலாக (Video Confrencing) இன்று நடைபெற்றது.

இதில், கிரேம் ஸ்மித்தின் பதவிக்கால ஒப்பந்தத்தை மேலும் இரண்டு ஆண்டுகள் நீட்டிப்பு செய்வதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து சிஎஸ்ஏ வெளியிட்டுள்ள அறிக்கையில், "ஸ்மித்தின் வருகைக்கு பிறகு தென் ஆப்பிரிக்க கிரிக்கெட், அனைத்து வடிவிலான கிரிக்கெட் போட்டிகளிலும் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் அவரின் ஆலோசனைகளும், கடின உழைப்பும் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டை மீண்டும் பழைய நிலைக்கு கொண்டுவருகிறது. இதன் காரணமாக தற்போது நிறைவடையவுள்ள அவரது பதவிக்கான ஒப்பந்தத்தை, அடுத்த 2022ஆம் ஆண்டு வரை நீட்டிப்பு செய்ய சிஎஸ்ஏ முடிவு செய்துள்ளது" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

கடந்த 2019ஆம் ஆண்டின் இறுதியில் தென் ஆப்பிரிக்க அணியின் முன்னாள் கேப்டனான கிரேம் ஸ்மித், தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வாரியத்தின் இடைக்கால இயக்குநராக ஆறு மாதங்களுக்கு நியமிக்கப்பட்டிருந்தார்.

இதையும் படிங்க: அதிக போட்டிகளில் விளையாட தோனி தான் முக்கிய காரணம் - கேதர் ஜாதவ் ஓபன் டாக்!

ABOUT THE AUTHOR

...view details