இந்தியா - ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான இரண்டாவது டி20 போட்டி இன்று சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்றது. இப்போட்டியில் இந்திய அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, மூன்று போட்டிகள் கொண்ட டி20 தொடரை 2-0 என்ற கணக்கிலும் கைப்பற்றி அசத்தியது.
இப்போட்டியின் போது இந்திய அணியின் சுழற்பந்துவீச்சாளர் யுஸ்வேந்திர சஹால், ஸ்டீவ் ஸ்மித்தின் விக்கெட்டை வீழ்த்தியதன் மூலம் சர்வதேச டி20 கிரிக்கெட்டில் தனது 59ஆவது விக்கெட்டை கைப்பற்றி அசத்தினார்.
இதன் மூலம் இந்திய அணி சார்பில் சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய ஜஸ்பிரித் பும்ராவின் (59 விக்கெட்டுகள்) சாதனையையும் சமன் செய்துள்ளார்.
முன்னதாக வேகப்பந்துவிச்சாளர் ஜாஸ்பிரித் பும்ரா 50 போட்டிகளில் பங்கேற்று 59 விக்கெட்டுகளைக் கைப்பற்றியதே சாதனையாக இருந்தது. தற்போது அதனை யுஸ்வேந்திர சஹால் தனது 44ஆவது டி20 போட்டியிலேயே சமன் செய்து அசத்தியுளார். மேலும் இவரது சிறந்த பந்துவீச்சாக கடந்த 2016ஆம் ஆண்டு இங்கிலாந்து அணிக்கெதிராக 25 ரன்களை கொடுத்து 6 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா எதிரொலி: கைவிடப்பட்ட இங்கிலாந்து - தெ.ஆப்பிரிக்கா போட்டி!