தமிழ்நாடு

tamil nadu

'பும்ராவால் நான் ஹிரோ ஆனேன்..!' - பகர் சமான்

"சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய வீரர் பும்ரா வீசிய நோபால்தான், தன்னை கிரிக்கெட்டில் ஹிரோவாக்கியது" என்று, பாகிஸ்தான் வீரர் பகர் சமான் தெரிவித்துள்ளார்.

By

Published : May 28, 2019, 9:17 PM IST

Published : May 28, 2019, 9:17 PM IST

பும்ராவால் நான் ஹிரோ ஆனேன் - ஃபகர் சமான்

இது குறுத்து அவர் கூறுகையில்,

"அந்தப் போட்டிக்கு முன், நோபாலில் நான் ஆவுட் ஆகுவது போல கனவுக் கண்டேன். நான் கனவுக் கண்டதைப் போலவே பும்ரா என்னை நோபாலில் அவுட் செய்தார். அந்தப் போட்டியில் சதம் விளாசியப் பின், நான் கிரிக்கெட்டில் மிகவும் பிரபலமடைந்தேன். அந்தப் புகழ் கிரிக்கெட்டில் பொறுப்புடையவாக என்னை மாற்றியது.அதுமட்டுமில்லாமல், நான் அணிக்காக எவ்வாறு பங்களிப்பு தர வேண்டும் என்ற முக்கியத்துவத்தை உணர்ந்துக் கொண்டேன். தற்போது இங்கிலாந்தில் நடைபெறவுள்ள உலகக் கோப்பை ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நிச்சயம் சிறப்பாக விளையாடுவேன்" என்றார்.

பும்ரா வீசிய நோபால்

2017ஆம் ஆண்டில் இங்கிலாந்தில் நடைபெற்ற சாம்பியன்ஸ் டிராஃபி கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில், இந்திய அணி 180 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் படுதோல்வி அடைந்தது. இதில், பும்ராவின் பந்துவீச்சில் பாகிஸ்தான் அணியின் தொடக்க வீரர் பகர் சமான் ஆட்டமிழந்தார். ஆனால், பும்ரா வீசிய அந்தப் பந்து நோபால் என நடுவர் அறிவித்ததால், ஆட்டத்தின் போக்கு முற்றிலும் மாறியது. இதனால், தனக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்ட பகர் சமான் 114 ரன்களை விளாசினார். பாகிஸ்தான் அணிக்காக 36 ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியுள்ள இவர் இதுவரை 1642 ரன்களை எடுத்துள்ளார். இதில், நான்கு சதம், ஒரு இரட்டை சதம் அடங்கும்.

ABOUT THE AUTHOR

...view details