இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் மகளிர் கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான தொடர் முடிவடைந்ததையடுத்து, இந்தியா - இங்கிலாந்து - ஆஸ்திரேலியா ஆகிய நாடுகள் பங்கேற்கும் முத்தரப்பு தொடர் இந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கவுள்ளது.
இந்தத் தொடருக்கு பின் சிட்னியில் மகளிர் உலகக்கோப்பை டி20 கிரிக்கெட் தொடர் தொடங்கவுள்ளது. அந்த தொடருக்கு இந்திய மகளிர் அணியைத் தயார்ப்படுத்தும்விதமாக இந்த முத்தரப்பு தொடரை இந்திய மகளிர் அணி அணுகவுள்ளது.
இந்தத் தொடரில் பங்கேற்கவுள்ள இந்திய அணி வரும் ஞாயிறுக்கிழமை தேர்வு செய்யப்படவுள்ளது. அதனோடு சேர்த்து உலகக்கோப்பையில் பங்கேற்கவுள்ள உத்தேச இந்திய அணி தேர்வு செய்யப்படவுள்ளது. இதுகுறித்து இந்திய கிரிக்கெட் நிர்வாகம் கூறுகையில், ‘உலகின் பலம் வாய்ந்த கிரிக்கெட் அணிகளுக்கு இடையிலான முத்தரப்பு கிரிக்கெட் தொடர் முக்கியத்துவம் வாய்ந்தது. அதனால் முக்கிய வீரர்களும், திறமைகளை வெளிப்படுத்திய வீரர்களும் நிச்சயம் தேர்வு செய்யப்படுவார்கள். பெரும்பாலும் முத்தரப்பு தொடருக்கு தேர்வு செய்யப்படும் அணியே உலகக்கோப்பை டி20 தொடருக்கும் தேர்வு செய்யப்படுவர். சிறு மாற்றங்கள் மட்டுமே இருக்கும்’ எனத் தெரிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஆள விடுங்கடா சாமி... ட்விட்டரிலிருந்து விலகிய ஆஸி. வீரர்!