தமிழ்நாடு

tamil nadu

கடைசி 4 இன்னிங்ஸில் 3 சதமடித்த பாபர் அஸாம்.. 2ஆம் நாள் முடிவில் பாக். 342 ரன்கள் குவிப்பு!

By

Published : Feb 9, 2020, 10:20 AM IST

ராவல்பிண்டி: வங்கதேச அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் இரண்டாவது நாள் ஆட்ட முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்துள்ளது.

babar-masood-tons-help-pak-take-control-on-day-2-vs-ban
babar-masood-tons-help-pak-take-control-on-day-2-vs-ban

பாகிஸ்தானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வங்கதேச அணி டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் டெஸ்ட் போட்டியில் டாஸ் வென்ற பாகிஸ்தான் கேப்டன் அசார் அலி பந்துவீச்சைத் தேர்வு செய்தார்.

பின்னர் களமிறங்கிய வங்கதேச அணி 233 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.

இரண்டாம் நாளில் பாகிஸ்தான் அணி பேட்டிங்கைத் தொடங்கியது. அதன் இரண்டாவது ஓவரிலேயே தொடக்க வீரர் அபித் அலி ரன் ஏதும் எடுக்காமல் ஆட்டமிழக்க, அதையடுத்து இணைந்த மசூத் - கேப்டன் அலி இணை இரண்டாவது விக்கெட்டுக்கு நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தினர்.

சதமடித்த மசூத்

கேப்டன் அசார் அலி 34 ரன்களில் பெவிலியன் திரும்ப, நட்சத்திர இளம் வீரர் பாபர் அஸாம் - மசூத் இணை வங்கதேச பந்துவீச்சாளர்களை திணறடித்தனர்.

சிறப்பாக ஆடிய மசூத் 53ஆவது ஓவரின்போது சதம் விளாசினார். அதனைத்தொடர்ந்து 54ஆவது ஓவரில் 100 ரன்களிஒல் பெவிலியன் திரும்ப, மறுமுனையில் சிறப்பாக ஆடிய பாபர் அஸாம் டெஸ்ட் போட்டிகளில் தனது 5ஆவது சதத்தைப் பதிவு செய்தார்.

சதம் விளாசிய பாபர் அஸாம்

கடந்த நான்கு இன்னிங்ஸ்களில் இது பாபர் அஸாமின் மூன்றாவது சதமாகும். பாபர் அஸாம் - சஃபிக் இணை விக்கெட் கொடுக்காமல் ஆட, வங்கதேச பந்துவீச்சாளர்கள் மோசமாக பந்துவீசத் தொடங்கினர். நிதானமாக ஆடிய சஃபிக் அரைசதம் கடந்தார்.

இரண்டாம் நாள் ஆட்டநேர முடிவில் பாகிஸ்தான் அணி 3 விக்கெட்டுகளை இழந்து 342 ரன்கள் எடுத்திருந்தது. பாபர் அஸாம் 143 ரன்களுடனும், சஃபிக் 60 ரன்களுடனும் களத்தில் உள்ளனர்.

இதையும் படிங்க: எட்டு வருடங்களுக்குப் பின் பிக் பாஷ் டி20 கோப்பையை வென்ற சிட்னி சிக்சர்ஸ்!

ABOUT THE AUTHOR

...view details