இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலிய அணி மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றுள்ளது. இதன் முதல் போட்டியில் ஆஸ்திரேலிய அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
இதையடுத்து இன்று ராஜ்கோட்டில் இரண்டாவது ஒருநாள் போட்டி நடைபெற்றுவருகிறது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் ஃபிஞ்ச் பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளார்.
கடந்த போட்டியில் காயம் காரணமாக ரிஷப் பந்த் விலகியதையடுத்து, கேஎல் ராகுல் விக்கெட் கீப்பராகவும், அவரது இடத்தை மனீஷ் பாண்டேவும் நிரப்பவுள்ளார். ஷர்துல் தாகூர் நீக்கப்பட்டு சைனிக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
ஆஸ்திரேலிய அணியில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை. கடந்த போட்டியில் ஆடிய அதே அணியே களமிறங்கவுள்ளது.
இரண்டாவது ஒருநாள் போட்டியில் வெற்றிபெற்றால் ஆஸ்திரேலிய அணி தொடரைக் கைப்பற்றும் என்பதால், இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே பன்மடங்கு அதிகரித்துள்ளது.
இந்திய அணி விவரம்: விராட் கோலி (கேப்டன்), ரோஹித் சர்மா, ஷிகர் தவான், கேஎல் ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், மனீஷ் பாண்டே, ஜடேஜா, சைனி, குல்தீப் யாதவ், ஷமி,பும்ரா.
ஆஸ்திரேலியா அணி விவரம்:ஆரோன் ஃபிஞ்ச் (கேப்டன்), டேவிட் வார்னர், மார்னஸ் லபுசானே, ஸ்டீவ் ஸ்மித், ஆஷ்டன் டர்னர், ஆஷ்டன் அகர், பேட் கம்மின்ஸ், மிட்சல் ஸ்டார்க், கேன் ரிச்சர்ட்சன், ஆடம் ஸாம்பா.