தமிழ்நாடு

tamil nadu

ஜமைக்காவுக்கு தடுப்பூசி: மோடிக்கு நன்றி தெரிவித்த ஆன்ட்ரே ரஸல்

ஜமைக்கா நாட்டிற்கு கோவிட்-19 தடுப்பூசி அனுப்பியதற்காக பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து ஆன்ட்ரே ரஸல் காணொலி வெளியிட்டுள்ளார்.

By

Published : Mar 18, 2021, 6:44 PM IST

Published : Mar 18, 2021, 6:44 PM IST

Andre Russell
Andre Russell

உலகப் பெருந்தொற்றான கோவிட்-19 பாதிப்பை எதிர்கொள்ள அனைத்து நாடுகளும் ஒன்று சேர்ந்து போராடிவரும் நிலையில், இந்தியா தனது பங்களிப்பாக பல்வேறு நாடுகளுக்கு தடுப்பூசி விநியோகம் மேற்கொண்டுவருகிறது.

அதன்படி, கரீபியன் தீவுகளைச் சேர்ந்த நாடான ஜமைக்கா நாட்டிற்கு அஸ்ட்ரா செனேக்காவுக்கு ஒரு லட்சத்து 75 ஆயிரம் டோஸ் தடுப்பூசிகளை இந்தியா அனுப்பிவைத்துள்ளது.

இதற்காக, பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி தெரிவித்து மேற்கு இந்திய கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான ஆன்ட்ரே ரஸல் ட்விட்டரில் காணொலி வெளியிட்டுள்ளார். அதில், இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய தூதரகத்திற்கு பெரும் நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். இந்த தடுப்பூசிகள் ஒரு நம்பிக்கையை அளித்துள்ளது. ஜமைக்கா மக்கள் இந்தியர்களை சகோதரர்களாக கருதுகிறார்கள். இந்த நடவடிக்கை அதை நிரூபித்துள்ளது. அனைவரும் பாதுகாப்பாக இருங்கள் எனக் கூறியுள்ளார்.

இதையும் படிங்க:பரபரப்பான ஆட்டத்தில் இந்தியா லெஜண்ட்ஸ் வெற்றி!

ABOUT THE AUTHOR

...view details