தமிழ்நாடு

tamil nadu

தனது குழந்தையின் வருகையை அறிவித்தார் ஆண்ட்ரே - #babyrussell

உலகின் அதிரடி வீரரான வெஸ்ட் இண்டீஸ் நாட்டைச்சேர்ந்த ஆண்ட்ரே ரஸ்ஸெல் தான் தந்தையாக உள்ளதாக என்ற செய்தியை வெளியிட்டு ரசிகர்களை மகிழ்வித்துள்ளார்.

By

Published : Sep 18, 2019, 11:25 AM IST

Published : Sep 18, 2019, 11:25 AM IST

Andre Russell

உலகின் அதிரடி வீரரும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் நட்சத்திர வீரருமான ஆண்ட்ரே ரஸ்ஸெல் 2016ஆம் ஆண்டு மாடல் அழகியான ஜெஸ்ஸி லாராவை திருமணம் செய்துகொண்டார். இந்நிலையில் சமீபத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட ரஸ்ஸெல் தான் தந்தையாகவுள்ளேன் என்ற தகவலை தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டார்.

தன் மணைவி லாராவுடன் ரஸ்ஸெல்

அந்தக் காணொலி பதிவில், "இது என் வாழ்வில் கிடைத்த மற்றொரு ஆசிர்வாதம். அது ஒரு பையனாகவோ அல்லது பெண்ணாகவோ இருந்தாலும் பரவாயில்லை. அனைவரும் கடவுளிடம் வேண்டுவது ஆரோக்கியமான குழந்தையை மட்டும்தான் #babyrussell" எனப் பதிவிட்டுள்ளார்.

தான் தந்தை ஆவதை குறிக்கும் ரஸ்ஸெல்

தற்போது இந்தக் காணொலி சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவிவருகிறது. இந்தக் காணொலியை கண்ட நண்பர்கள், ரசிகர்கள், நெட்டிசன்கள் ஆண்ட்ரே ரஸ்ஸெலுக்கு வாழ்த்து செய்திகளைத் தெரிவித்துவருகின்றனர்.

ABOUT THE AUTHOR

...view details