ஏமாற்றிய சிந்து:
இந்த ஆண்டுக்கான டென்மார்க் பேட்மிண்டன் ஓபன், ஓடென்ஸ் நகரில் நடைபெற்றுவருகிறது. இதில், இன்று நடைபெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு இரண்டாம் சுற்றுப் போட்டியில் இந்தியாவின் நட்சத்திர வீராங்கனை பிவி சிந்து, தென் கொரியாவின் அன் சீ யங்குடன் மோதினார்.
பரபரப்பாக நடைபெற்ற இப்போட்டியில் சிந்து 14-21, 17-21 என்ற நேர் செட் கணக்கில் அதிர்ச்சி தோல்வியடைந்தார். சீன, கொரிய ஓபனைத் தொடர்ந்து தற்போது டென்மார்க் தொடரிலும் இவர் தொடக்கத்திலேயே வெளியேறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
சாய் பிரனீத் தோல்வி:
ஆடவர் ஒற்றையர் பிரிவின் முதல் சுற்றில் ஒலிம்பிக் சாம்பியன் சீனாவின் லின் டானை வீழ்த்திய சாய் பிரனீத், இன்று நடைபெற்ற இரண்டாம் சுற்றில், ஜப்பானின் கென்டா மொமோடாவிடம் 6-21, 14-21 என்ற நேர் செட் கணக்கில் சரணடைந்தார். முன்னதாக இந்தத் தொடரில் இந்திய வீரர்களான சாய்னா நேவால், கிதாம்பி ஸ்ரீகாந்த், பாருப்பள்ளி காஷ்யப், சவுரப் வர்மா ஆகியோர் தோல்வியடைந்தனர்.