கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடர் கொரிய நாட்டின் பல்வேறு நகரங்களில் நடைபெற்று வருகிறது. இதில் இன்று நடைபெற்ற ஆடவர் ஒற்றையர் பிரிவு காலிறுதிச்சுற்று ஆட்டத்தில் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப், டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்சனை எதிர்கொண்டார்.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஆட்டத்தின் முதல் செட்டை இந்தியாவின் காஷ்யப் 24-22 என்ற புள்ளிக்கணக்கில் ஜோர்கென்சனிடம் போராடி கைப்பற்றினார்.
அதன் பின் தனது சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய காஷ்யப் இரண்டாவது செட்கணக்கில் 21-08 என்ற புள்ளிகள் அடிப்படையில் அதிரடியாக கைப்பற்றினார்.
இதன் மூலம் இந்தியாவின் பாருப்பள்ளி காஷ்யப் 24-22, 21-08 என்ற நேர் செட்கணக்கில் டென்மார்க்கின் ஜான் ஓ ஜோர்கென்செனை வீழ்த்தி, கொரிய ஓபன் பேட்மிண்டன் தொடரின் அரையிறுதிச் சுற்றுக்கு முன்னேறினார்.
இதையும் படிங்க: #KoreaOpen: முதல் சுற்றிலேயே வெளியேறிய சிந்து , சாய்னா - அதிர்ச்சியில் ரசிகர்கள்!