தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

'கணவர் உயிரிழந்தபோது அழவில்லை'- பவானி ரெட்டி உருக்கம்

பவானி ரெட்டி தன்னுடைய கணவர் உயிரிழந்ததற்கு அழவே இல்லை என பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசியுள்ளார்.

பவானி ரெட்டி
பவானி ரெட்டி

By

Published : Oct 5, 2021, 8:01 PM IST

கமல்ஹாசன் தொகுத்துவழங்கும் பிக்பாஸ் ஐந்தாவது சீசன் ஞாயிற்றுக்கிழமை (அக்.3) தொடங்கியது. நேற்று (அக்.2) முதல்நாள் என்பதால் போட்டியாளர்களுக்கு டாஸ்க் எதுவும் கொடுக்காமல் பிக்பாஸ் வேடிக்கை மட்டும் பார்த்தார்.

இதனிடையே இன்றைக்கான மூன்றாவது ப்ரோமோவில் பவானி ரெட்டி உயிரிழந்த கணவர் குறித்து வருத்தப்பட்டு உருக்கமாக பேசுகிறார்.

இது குறித்து வெளியான ப்ரோமோவில், "என்னுடைய கணவர் உயிரிழந்த செய்தி கேட்டு நான் அதிர்ச்சியடைந்து அப்படியே உட்கார்ந்து விட்டேன். நான் அழவே இல்லை. என்ன நடந்தது என்று, எனக்கு நானே நான் திரும்பி யோசித்துக் கொண்டே இருந்தேன்" என உருக்கமாக இசைவானியிடம் தெரிவித்தார்.

இதைக்கேட்ட இசைவானி, "ஒவ்வொருவர் வாழ்க்கையிலும் ஒரு சோகம் இருக்கம்போல. அதுபோலத் தான் உங்கள் வாழ்க்கையில் இந்த சோகம்" என அவருக்கு அறுதல் கூறினார்.

இன்று வெளியான ப்ரோமோக்களிலிருந்து, இன்றைய எபிசோட் முழுவதும் சோகமாகவும், அழுகையாகவும் செல்லும் எனப் பார்வையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

இதையும் படிங்க:பிக்பாஸில் 2ஆவது நாளே அழுகாச்சியா.... புலம்பும் ரசிகர்கள்

ABOUT THE AUTHOR

...view details