தமிழ்நாடு

tamil nadu

ETV Bharat / sitara

1.5 மில்லியன் டாலருக்கு விற்பனையான முதல் பேட்மேன் காமிக்...!

ஹெரிடேஜ் ஏலத்தில் பேட்மேனின் முதல் புத்தகத்தின் நகல் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது.

By

Published : Nov 20, 2020, 8:31 PM IST

first-batman-comic-sells-for-record-usd-1-dot-5-million
first-batman-comic-sells-for-record-usd-1-dot-5-million

பேட்மேனின் முதல் புத்தகத்தின் நகல் 1.5 மில்லியன் அமெரிக்க டாலருக்கு ஏலம் விடப்பட்டுள்ளது. இதைப்பற்றி ஹாலிவுட் சினிமா வட்டாரத்தில் கூறுகையில், முன்னதாக 1939ஆம் ஆண்டு வெளிவந்த டிடெக்டிவ் காமிக்ஸ் நம்பர்.27 என்ற புத்தகம் 10 வருடத்திற்கு முன்னதாக விடப்பட்ட ஏலத்தில் ஒரு லட்சத்து 75 ஆயிரம் டாலருக்கு விற்பனை செய்யப்பட்டது.

இதற்கு சான்றழித்த உத்தரவாத நிறுவனம் (சி.ஜி.சி) தரத்தின் அடிப்படையில் 7.0 என்று தரம் வழங்கப்பட்டது. சி.ஜி.சியின் வரலாற்றில் இன்னும் ஐந்து கட்டுப்பாடற்ற காமிக்ஸ் மட்டுமே உயர்ந்த தரத்தை பெற்றுள்ளன.

ஹெரிடேஜ் ஏலத்தின் துணைத் தலைவர் பாரி சாண்டோவால் கூறுகையில், இதன் விலையைப் பற்றி ஆச்சரியப்படவில்லை. எல்லாவற்றிற்கும் மேலாக, இதுவரை வெளியிடப்பட்ட மிக முக்கியமான காமிக் புத்தகம். அதேபோல் நாம் காணும் சிறந்த பிரதிகளில் ஒன்றாகும்.

முதல் பேட்மேன் காமிக்

டிடெக்டிவ் காமிக்ஸ் எண் 27 இல் வெளியிடப்பட்ட கலைஞர் பாப் கேன் மற்றும் எழுத்தாளர் பில் ஃபிங்கரின் கதை "தி கேஸ் ஆஃப் தி கெமிக்கல் சிண்டிகேட்", உலகத்தை தி டார்க் நைட்டுக்கு அறிமுகப்படுத்தியது.

'டிடெக்டிவ் காமிக்ஸ்' விற்பனை நவம்பர் 22 வரை இயங்கும் ஹெரிடேஜ் ஏலத்தின் நான்கு நாள் காமிக்ஸ் & காமிக் ஆர்ட் நிகழ்வின் முதல் அமர்வின் போதுவந்தது. மேலும் பேட்மேனை மையமாகக் கொண்ட 'ஆல்பிரட் பென்னிவொர்த் சேகரிப்பு' என்றும் அழைக்கப்படுகிறது. ஹெரிடேஜ் ஏலத்தில் இதுவரை விற்ற மிக விலையுயர்ந்த காமிக் புத்தகம் இதுவாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க:We Can Be Heroes' படத்தில் நடித்த அனுபவம் குறித்து பிரியங்கா

ABOUT THE AUTHOR

...view details