மும்பை: பெண் ஒருவரைத் துன்புறுத்தியதாக டிவி நடிகர் ஷாபாஸ் கான் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டிருப்பதாக மும்பை காவல் துறையினர் தெரிவித்தனர்.
பெண்ணைத் துன்புறுத்தியதாக பிரபல டிவி நடிகர் மீது வழக்கு
பெண்ணைத் துன்புறுத்தியதாக இந்திய தண்டனைச் சட்டம் 354, 509 ஆகிய பிரிவுகளின் கீழ் பிரபல டிவி நடிகர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்திய தண்டனைச் சட்டம் 354 (பெண் மீது தாக்குதல் நடத்துவது), 509 (பெண்களை அவமதிக்கும் விதமாகச் சொற்களை அல்லது செய்கைகளைச் செய்தல்) ஆகிய இரண்டு பிரிவுகளில் நடிகர் ஷாபாஸ் கான் மீது மும்பை ஓஷிவாரா பகுதி காவல் நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. இதுதொடர்பாக விசாரணை நடைபெற்று வருவதாக காவல் துறையினர் தெரிவித்தனர்.
பத்ம பூஷண் விருது வென்ற மறைந்த பாடகர் உஷ்டாத் அமிர் கானின் மகன்தான் ஷாபாஸ் கான். இவரது நிஜப் பெயர் ஹெய்தர் கான். நடிப்புக்காக தனது பெயரை மாற்றியிருக்கும் இவர், தெனாலி ராமா, ராம் சியா கீ லவ் குஷ் என ஏராளமான டிவி தொடர்களில் நடித்துள்ளார். வில்லத்தனம் மிகுந்த கதாபாத்திரங்களில் நடித்துள்ள இவர் இந்தி, குஜராத்தி, பஞ்சாபி மொழிகளிலும் பல படங்களில் நடித்துள்ளார்.