இயன் ஃப்ளெமிங் உருவாக்கிய பிரிட்டிஷ் ரகசிய உளவாளி ஜேம்ஸ் பாண்ட் கதாபாத்திரம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பை பெற்றது. இந்த கதாபாத்திரத்தை மையமாக வைத்து 24 திரைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.
ஜேம்ஸ்பாண்ட்டின் கடைசி திரைப்படம் 2015 ஆம் ஆண்டு வெளியான 'ஸ்பெக்டர்'. கடைசி நான்கு பாகங்களில் ஜேம்ஸ் பாண்ட்-ஆக டேனியல் க்ரெய்க் நடித்து வருகிறார்.
ஜேம்ஸ் பாண்ட் திரைப்பட வரிசையில் 25ஆவது படமாக 'நோ டைம் டூ டை' உருவாகியுள்ளது. இதிலும் ஜேம்ஸ் பாண்டாக டேனியல் க்ரெய்கே தனது மிரட்டல் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.
'கேசினோ ராயல்' தொடங்கி, 'குவாண்டம் ஆஃப் சோலேஸ்', 'ஸ்கை ஃபால்', 'ஸ்பெக்டர்' படங்களைத் தொடர்ந்து 'நோ டைம் டூ டை' பிரம்மாண்டமாக உருவாகி வருகிறது.
இந்தப்படத்தில் ராமி மாலெக் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க, ரால்ப் பெய்னெஸ், நவோமி ஹாரிஸ், ரோரி கிண்ணியர், லியா செய்டாக்ஸ், ஜெஃப்ரி ரைட் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
மெட்ரா கோல்ட்வைன் மேயர், யூனிவர்சல் பிக்சர்ஸ், இயான் புரொடக்ஷன் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இப்படத்தை பிரபல ஹாலிவுட் இயக்குநர் கேரி ஜோஜி ஃபுகுநாகா இயக்கியுள்ளார்.
ஸ்பை வேலையை விடுத்து ஜமைக்கா நாட்டில் தனது வாழ்க்கையை அமைதியாக தொடரும், ஜேம்ஸ் பாண்ட்-ஐ தேடி வரும் சிஐஏ, பழைய நண்பரின் வேண்டுகோளை ஏற்று கடத்தப்பட்ட விஞ்ஞானி ஒருவரை மீட்கும் பணியில் களமிறங்குகிறார்.
இதன் பின்னர் வழக்கமான அதிரடி ஆக்ஷன், சாகசங்கள், ரொமாண்ஸ் என பாண்ட் படங்களுக்கே உரித்தான அதகளத்துடன் 'நோ டைம் டூ டை' படத்தின் கதைக்களம் அமைக்கப்பட்டுள்ளது.
'நோ டைம் டூ டை' படத்தின் அனைத்து கட்ட பணிகளும் நிறைவடைந்து வெளியீட்டிற்கு தயாராக இருந்த நிலையில், கரோனா அச்சுறுத்தல் காரணமாக பல முறை இதன் வெளியிட்டு தேதி மாற்றப்பட்டது. தற்போது செப்டம்பர் 30ஆம் தேதி இப்படம் வெளியாகிறது.
இந்நிலையில், உலகின் ஐமேக்ஸ் திரையரங்கம் ஜெர்மனியில் திறக்கப்படவுள்ளது. ஜெர்மனியில், உள்ள லியோன் பெர்க்கில் உள்ள ட்ராமாபிளாஸ்ட் மல்டிப்பெளக்ஸ் திரையரங்கில், ஐமேக்ஸ் அமைந்துள்ளது. இதன் திரை உயரம் 70 அடி, 125 அடி அகலமும் கொண்டுள்ளது. இதனால் இதில் திரையிடப்படும் படங்கள் ரசிகர்களுக்கு புதிய அனுபவத்தை தரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திரையில் முதன் முதலாக 'நோ டைம் டூ டை' திரைப்படம் செப்டம்பர் 30 ஆம் தேதி திரையிடப்படுகிறது.
இதையும் படிங்க: மீண்டும் வெளியீட்டு தேதியை மாற்றிய 'ஜேம்ஸ் பாண்ட்' படக்குழு- ஒரு முடிவுக்கு வாங்கப்பா