கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் சீனாவின் வூகான் மாகாணத்தில் இருந்து பரவத் தொடங்கிய இந்த கோவிட்-19 வைரசால் உலகளவில் 2 லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். ஐரோப்பிய, மத்தியக் கிழக்கு நாடுகளில் தீவிரமாகப் பரவிய இதன் தாக்கம், கடந்த 10 நாட்களாக அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், இத்தாலி, தென் கொரியா, இந்தியா ஆகிய நாடுகளில் வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது.
செவிலியருக்கும் நெஞ்சு நெகிழ் நன்றி - விவேக்!
கரோனாவைக் கட்டுப்படுத்தும் விதமாக அயராது உழைக்கும் மருத்துவர்களுக்கும் சுகாதாரத் துறையினருக்கும் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில் நன்றி தெரிவித்துள்ளார்.
இதுவரை 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் இந்த வைரசால் உயிரிழந்துள்ள நிலையில், அதன் தாக்கம் நாளுக்குநாள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இது குறித்து உலக சுகாதார அமைப்பும், அந்ததந்த நாடுகளும் தங்களது மக்களுக்கு விழிப்புணர்வைகளை ஏற்படுத்தி வருகிறது.
இந்நிலையில், கரோனாவை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக மருத்துவர்களும் சுகதாரத்துறையினரும் அயராது உழைத்து வருகின்றனர். இவர்களுக்கு நன்றி கூறும் விதமாக நடிகர் விவேக் தனது ட்விட்டர் பக்கத்தில், 8 கோடி மக்கள்! 3 அண்டை மாநில எல்லைகள்! தினம் விமான வழியில் ஆயிரக்கணக்கான பயணிகள்! சவால்களை எதிர்கொண்டு பணிபுரியும் அமைச்சர், சுகாதாரத் துறை, தங்கள் உயிரைப் பணயம் வைத்து சேவை செய்யும் மருத்துவர்கள், செவிலியருக்கும் நெஞ்சு நெகிழ் நன்றி சொல்வோமா? என்று அதில் பதிவிட்டுள்ளார்.