கரோனா தடுப்பு நடவடிக்கையாக இந்தியா முழுவதும் தேசிய ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இதனால் திரைத்துறையில் படப்பிடிப்புகள் அனைத்தும் கடந்த இரண்டு மாதங்களாக ரத்து செய்யப்பட்டுள்ளன.
இதனையடுத்து திரைப்பிரபலங்கள் தங்களது குடும்பத்தினருடன் நேரத்தை செலவிட்டு வருகின்றனர். மேலும் சமூக வலைதளங்கள் வாயிலாகவும், தங்களது ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகின்றனர்.
தற்போது நடிகரும் தயாரிப்பாளருமான விஷ்ணு விஷால், தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை, தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
அதில், தொலைக்காட்சி முன்பு தனது மகனை தூக்கிப் பிடித்தபடி விஷ்ணு விஷால் இருக்கிறார். மேலும் '75 நாட்களுக்குப் பின் தனது மகனை சந்தித்துள்ளதாக' அதில் குறிப்பிட்டுள்ளார்.
மகனைச் சந்தித்த குஷியில் விஷ்ணு விஷால் செய்த காரியம்!
நடிகர் விஷ்ணு விஷால், தனது மகனுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றைத் தன் ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.
விஷ்ணு விஷால்
இந்தப் புகைப்படம் தற்போது ரசிகர்களால் அதிகம் லைக் செய்தும் பகிரப்பட்டும் வருகிறது.